27ஆம் திகதி முதல் இ.போ.ச வில் இணையும் சொகுசு பஸ் வண்டிகள்

04

இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காகப் பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் பொது போக்குவரத்துத் துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்குத் தருவிக்கப்படவுள்ளன. ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.(ஸ) 

01
02
03
04
Previous articleவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை!
Next articleஇலங்கை பாடத்திட்டத்தில் 38 ஆண்டுகள் கற்பிக்கப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத கொள்கைகள்