வாகனக் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மாத்திரம் சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது 5 சதவீத வாகனங்கள் மாத்திரம் உள்ளதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்டிக சம்பத் மெரஞ்சீஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் எதிர்வரும் மாதங்களுக்கு விற்பனை செய்வதற்கு போதுமான வாகனங்கள் இல்லை.

சுமார் இரண்டு வருடங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று அதிகாரிகள் அறிவித்தபோது, வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும், வாகனம் கொள்வனவு செய்வது கடினம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் சந்தையில் வாகனங்கள் விரைவாக விற்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter