மேலும் 196 கொரோனா நோயாளிகள் அடையாளம் – கந்தகாடு நிலையம்

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 56 பேருடன் சேர்த்து , மொத்தமாக 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் மருத்துவமனை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு இவ்வாறு சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் பின்பற்றுமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு