பூகம்பத்திலிருந்து தப்பிக்க கூடிய வகையில் ஜப்பானில் புதிய ரயில் அறிமுகம்

பூகம்பத்திலிருந்து பாதுகாப்பாக தப்பிக்க கூடிய வகையில், மணிக்கு 360 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய புதிய  புல்லட் ரயிலை ஜப்பான்  அறிமுகப்படுத்தியுள்ளது. 

A new bullet train - the N700S (pictured) - has entered service in Japan that’s the country’s fastest, smoothest, most comfortable and safest yet. It’s able to ‘escape’ to safety in the event of an earthquake

இவ் புதிய புல்லட் ரயிலானது ஜப்பானின் ரயில்களில் வேகமான, மென்மையான, மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பானது என வர்ணிக்கப்பட்டுள்ளது. 

டோக்கியோவை ஒசாகா மற்றும் கோபியுடன் இணைக்கும் ரயில் சேவையில் இவ் ரயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் லித்தியம் அயன் மின்கலங்கள் உள்ளன, எனவே இதனால் மேல்நிலை சக்தி இல்லாமல் இயங்க முடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

While the N700S looks very similar to the N700A trains it’s replacing, it boasts a number of impressive new features

N700S என பெயரிடப்பட்டுள்ள இவ் ரயில், 360 கிமீ (223 மைல்) வேகத்தைக் கொண்டுள்ளது.

டோக்கியோவை ஒசாகா மற்றும் கோபியுடன் இணைக்கும் இவ் ரயில் சேவை உலகின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 

An N700A bullet train passes in front of the mighty Mt Fuji, which comes into view 44 minutes after departure from Tokyo

1964 ஒக்டோபர் 1, அன்று டோக்கியோவிற்கும் ஒசாகாவிற்கும் இடையில் முதல் புல்லட் ரயில்கள் இயங்கத் தொடங்கியபோது இது உலகின் முதல் அதிவேக பாதையாக மாறியது – மேலும் இது 12,400 அடி உயர புஜி மலையை கடந்து செல்கிறமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page