இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் அமெரிக்காவை தொடர்ந்து அதிக கொரோனா நோயாளர்களை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 80,000 க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர். எனினும் இறப்பு வீதம் தற்பொழுது 1.63 வீதமாக குறைவடைந்துள்ளமை மிகவும்  ஆறுதல் அளிக்கும் செயற்பாடாகும்.

கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,000 பேர் மரணித்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் 7 மாநிலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இது இந்தியாவின் சனத்தொகையில் 48 சதவீதம் ஆகும்.

மகாராஷ்டிரா – 1097856 பாதிப்பு , 30409 இறப்பு

ஆந்திர பிரதேசம் – 583925 பாதிப்பு , 5041 இறப்பு

தமிழ்நாடு – 514208 பாதிப்பு , 8502 இறப்பு

கர்நாடகா  – 475265 பாதிப்பு , 7481 இறப்பு

உத்தரபிரதேசதம் – 324036 பாதிப்பு , 4604 இறப்பு

டெல்லி – 225796 பாதிப்பு , 4806 இறப்பு

மேற்கு வங்காளம் – 209146 பாதிப்பு , 4062 இறப்பு

இருப்பினும் தொற்று பரவும் வீதம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கான பிரதான காரணம் இந்தியாவில் வேலைத்தளங்கள்,பொதுபோக்குவரத்து மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையாகும்.

இந்தியாவில் சேரிபுறங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்திய அரசு அவசரமாக இவற்றை ஆரம்பித்தமைக்கு முக்கிய காரணமாகும்.

மேலும், உலகின் மிகவும் மோசமானது மக்களை வீடுகளில் வைத்திருந்த முடக்கல் (lockdown) நிலையாகும். இதன்காரணமாக பல்வேறு வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள்  என்பன இழுத்து முடப்பட்டன.

இதனால் மக்கள் பலர் வேலைவாய்ப்புக்களை இழந்து தங்கள் சொந்த இடங்களுக்கு கால்நடையாகவும், பஸ் மற்றும்  ரயில் மூலமாகவும் சென்றடைந்தனர்.

இதனால் பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சி நிலைக்கு செல்ல நேரிட்டது.

இந்தியாவில் இதுவரை  50 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும் உலகத்துடன் ஒப்பிடும் போது  பரிசோதனை வீதம் மிகவும் குறைவானது எனவும், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  இதைவிட பன்மடங்காகும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 100 மில்லியன் பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்றுகிறார்களா என்பதை நிச்சயமாக கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரியான முறையில் முடக்கல் நிலை முகாமைத்துவம் செய்யப்பட்டிருந்தாலோ, சுகாதாரம் மற்றும் சமூக இடை வெளிகளை சரியாக பேணப்பட்டிருந்தாலோ இதனை மேலும் குறைத்திருக்கலாம் என சமூக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்பொழுது கொரோனா வைரஸ் தொடர்பில் சிகிச்சையளிக்கும்  வகையில் 15,000 மேற்பட்ட நிலையங்களும், 1 மில்லியனுக்கும் மேற்பபட்ட  தனிமைப்படுத்தல்  படுக்கை வசதிககளும் காணப்படுகின்றன.

மேலும்,முகக்கவசங்கள் பற்றாக்குறைக்கான எந்த வொரு முறைப்பாடுகளும்  இல்லை.  எவ்வாறெனினும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் சுகாதார நிலைமையை கொரோனா வைரஸ் மேலும் தளர்வடைய செய்துள்ளது.

இதேவேளை வைத்தியர்களும் சுகாதார சேவையாளர்களும் ஓய்வின்றி சேவைகளை மேற்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 44 ஆயிரத்தை கடந்து தற்போதைய நிலைவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,01,321

பிரேசில் – 1,34,174

இந்தியா – 82,066

மெக்சிகோ – 71,678 

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page