வெளியானது அங்கொட லொக்காவின் மரணத்தின் மர்மம்!

இலங்கையின் பாதால உலகக்குழு தலைவரும் அரசாங்கத்தினால் தேடப்பட்டவருமான மத்துமகே லசந்த சமிந்த பெரேரா என அறியப்படும் அங்கொட லொக்கா மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தில் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். 

அங்கொட லொக்காவின் மரணத்தையடுத்து அதில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் இரசாயனவியல் பரிசோதனையிலும் அவர் இயற்கையான முறையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அவருடன் கோயம்புத்தூரில் உள்ள பாலாஜீநபகரில் இருந்த இலங்கை பெண்ணான  27 வயது, அமானி தான்ஜி, என்பவர் சம்பவ தினம் வழங்கிய வாக்குமூலத்தில் அங்கொட லொக்கா ஜீலை 3 ஆம் திகதியன்று நெஞ்சு வலி காரணமாக அவஸ்தைக்கு உள்ளானதாகவும் அயலவர்கள் இருவருடன் அவரை வைத்தியசாலைக்கு கூட்டிச்சென்ற போது அவர் அங்கு உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிசெய்ததாகவும் கூறியிருந்தார். 

எனினும் இவரின் மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தையடுத்து, அங்கொட லொக்காவின் சடலத்தின்  உடற்கூற்று மாதிரிகள் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

கடந்த 2 வருடகாலமாக அங்கொட லொக்கா பிரதிப் சிங் என்ற பெயரில் இந்தியாவின் ஆதார் அட்டை ஒன்றையும் வைத்திருந்தார், இவருக்கு ஆதார் அட்டையை மற்றும் போலி ஆவணங்களைப்  பெருவதற்று உதவிய குற்றச்சாட்டில் மதுரையின் வழக்கறிஞரான டி.சிவகமசுந்தரி மற்றும் ஈரோடைச் சேர்ந்த அவரது நண்பர் எஸ்.தயனேஸ்வரன் ஆகியோர் ஆகஸ்ட் 02ஆம் திகதி கோயம்புத்தூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அங்கொட லொக்காவின் மரணம் குறித்து ஒரு வழக்கும்,  கைது  செய்யப்பட்ட மூவருக்கும் எதிராக போலி  ஆவணங்களை வழங்கியமை, குற்றவாளிக்கு அடைக்கலம் வழங்கியமை, குற்றவியல் சதி மற்றும் பதிவுகளை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மற்றொறும் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அங்கொட லொக்காவின் மரணம் மரடைப்பினால் நிகழ்தமை உறுதிப்படுத்தப்பட்டதையமுத்து, இந்திய மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு இரண்டாவது வழக்கு தொடர்பில் கவணம் செலுத்த உள்ளதாக சிரேஸ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கொட லொக்காவின் கைத்துப்பாக்கியுடன் தொடர்புடைய இலங்கை பிரஜையை  தேடும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

SOURCEவீரகேசரி பத்திரிகை