முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கான கட்டட நிர்மானம் – M.H.A. ஹலீம்

2015ம் ஆண்டு அமைச்சை முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்கள் பொறுப்பெடுத்த போது முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு விஜயம் செய்தார். சேறும் சகதியுமாகவும் மிக மோசகமான நிலைமையில் இருந்த பாதை வழியில் போக வேண்டி நிலை அவருக்கு ஏற்பட்டது.

அன்று திணைக்களம் இயங்கி வந்த கட்டித்தை அவர் அடைந்த போது அங்கு நிலவிக் கொண்டிருந்த அவலமான நிலைமையை அவருக்கு அவதானிக்க முடிந்தது.

அது ஏறக்குறைய 70 பேர் அளவில் சேவையாற்றக் கூடிய நம் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு திணைக்களம். அதன் கீழ் வக்பு சபை, வக்பு நீதிமன்றம் மற்றும் ஹஜ் விவகாரம் என பலதரப்பட்ட விடயங்கள் நடைபெற்று வந்தன

அன்று சமூகமளிக்காத அதிகாரிகளுடைய தளபாடங்களை பயண்படுத்தியே இருந்த அதிகாரிகள் தங்களது கடமைகளையாற்ற வேண்டி இருந்த துர்ப்பாக்கிய நிலையை முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு அவதானிக்க முடிந்தது.

அதேபோல் அங்கு கடமையாற்றும் பணியாளர்களுக்கு தேனீர் ஊற்றுவதற்கு கூட பிரத்தியேக இடம் இருக்கவில்லை.

இதனைத் தாண்டி ஆவணங்களைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் இறாக்கைகள் அதற்கென ஒரு ஒழுங்கான இடம் இல்லாமல் வராண்டாவில் வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக முக்கிய ஆவனங்களை ஒழுங்காக பராமரிக்க முடியாத ஒரு நிலை காணப்பட்டது.

இந்த விடையங்களை பார்க்கின்ற போது திணைக்களம் எந்தளவுக்கு பரிதாபகரமான நிலையில் இருந்தது என்பதை உங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த அவலநிலையை சீர் செய்வதற்காக வேண்டி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் அஸ்வர் ஆகியோர் ஆரம்ப கட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்ட போதும் 2002ம் ஆண்டளவில் அரசாங்க நிதி ஒதுக்கீடு இன்மையால் அது 13 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அன்று முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்கள் அமைச்சைக் கையேற்றதன் பின் உலமாக்கலுடனும், சமுக செயற்பாட்டாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் அவர்களின் முதல் கோரிக்கையாக திணைக்களத்திற்கான ஒழுங்கான கட்டிடத்தின் முக்கித்துவத்தை முன்வைத்தனர்.

அதன்படி 2016ம் ஆண்டு முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்கள் அன்றைய பிரதமரிடம் இது தொடர்பில் ஆலோசித்து அன்றைய நிதி அமைச்சர் ரவி கருநாநாயக அவர்களையும் திணைக்களத்தை பார்வையிட செய்தார்.

அதன்படி 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் 296 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்த கட்டிடம் ஒரு வருட காலத்திற்குள் 7 மாடிகள் இரண்டு மின் தூக்கிகள் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டது.

இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் 2017.01.17ம் திகதி அன்றைய நாள் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனை அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்தது வைக்கப்பட்டது.

இதற்கு முன் வக்ப் சபை தங்களது கலந்துரையாடல்களை YMMA போன்ற வெளி இடங்களிளேயே நடாத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வக்ப் சபை, ஹஜ் விவகாரம், மத்ரஸா விவகாரம் வக்பு நீதிமன்றம் போன்றவைகள் அந்த கட்டிடத்தில் தனித்தனியாக இயங்கும் வகையில் ஒழுங்கு படுத்த முடிந்தது.

இது மாத்திரம் அன்றி திணைக்களத்திற்கு மேலும் 50 பேர் உள்வாங்கப்பட்டு திணைக்களத்தின் Work force இன்னும் பலப்படுத்தப் பட்டது.

இது தவிர வக்ப், ஹஜ் விவகாரங்களுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை கணிணி மயப்படுத்தப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது உண்மையில் ஒரு அத்தியாவசியமான ஒன்று.
ஏனெனில் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு உற்பட்ட பல துறைகளை வேறு திணைக்களங்களுக்குள் உள்வாங்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மாற்றாக இது அமைந்தது.

இந்த கட்டிடத்தை கட்டி முடித்த படியால் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தை நவீன மயமான ஒரு ஒழுங்கு படுத்தலுக்கு கொண்டு வரும் பாக்கியம் முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்களையே சாரும்.அது அவருக்கு கிடைத்த மாபெரும் பாக்கியமே.
முன்னால் அமைச்சரின் ஊடக பிரிவு

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleஜனாஸா அறிவித்தல்- மல்வானஹின்ன, A.C.A மஜீத்
Next articleமுஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களுக்காக என்ன செய்தார்கள்? – A.L.M பாரிஸ் கேள்வி