கொழும்பில் கொரோனா – சமூகப் பரவல் அல்ல என்கிறது சுகாதார அமைச்சு

கொழும்பு – 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ்நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பு , ஜந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இவர் கடந்த சில நட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வருகைதந்ததையடுத்து 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

14 நாட்கள் பின் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் கொரோனா தொற்று இல்லையென உறுதிபடுத்தப்பட்டதையடுத்து இவரின் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  அந்தக் காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து அதிரடியாக செயற்பட்ட அரசாங்கம் கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதியை தற்காலிகமாக மூடியுள்ளது.

எனினும், இது சமூக பரவல் அல்லவென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும் அந்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் சிலரை கண்டறிய சுகாதார பாதுகாப்பு தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters