முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை, தீவிர கண்கானிப்பில் பொலிஸார் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இன்றுமுதல் -28- முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முகக் கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.
பல இடங்களிளல் முகக் கவசம் அணிவதில்லை என பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்கானிப்பிலும் விசேட பொலிஸ் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மேல் மாகாணத்தினுள் மாத்திரம் 19000க்கும் அதிகமானோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கு 6700 பேர் முகக் கவசம் அணியாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters