அக்குறணை பிரதேச சபையும் திண்ம கழிவு பிரச்சினையும் அதன் உண்மை நிலையும்

யாலுகஹவெல திண்மக் கழிவு பிரச்சினை தொடர்பாக உங்களுடன் சில விடையங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் .

2019 இல் உள்ளுராட்சி மன்ற ஆணையாளரிடம் இருந்து கண்டி மாவட்டத்திற்கு உற்பட்ட இரு உள்ளாட்சி சபைகளுக்கு சுற்றாடல் தொடர்பான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் உள்ளாட்சி அதிகார சபை சார்பில் வந்திருந்த அதிகாரிகள் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்து உரையாடி அதற்கான இடத்தை சென்று பார்வையிட்டனர்.

பின் அவர்களது திட்டத்திற்கு அமைய அவற்றை செயற்படுத்த அக்குறணை பிரதேச சபை பொருத்தமானது என அவர்கள் அடையாளம் கண்டு அதனை இங்கு செயற்படுத்த முன் வந்தனர்.

அந்த இடம் முன்னால் தவிசாளர் சிம்சான் அவர்களின் 04 வருட காலம் தொட்டு முன்னால் பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவருட காலம் வரை மொத்தமாக 05 வருடங்களாக கொட்டப்பட்ட குப்பைகளால் நிரம்பி அந்த பிராந்திய மக்கள் பெருந்த அசௌகரியங்களை எதிர் கொள்வதை அவதானிக்க முடிந்தது.

அந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக வேண்டி இந்த கழிவுகளை ஒதுக்கி தருவதோடு அந்த காணியை சுற்றிவர மதில் அமைத்துத்தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளரிடம் முன்வைத்தனர்.

இது தொடர்பாக மாதாந்தம் நடைபெறும் கூட்டதொடரில் கலந்துரையாடப் படும் போது பிரதேச சபை பொது நிதியின் மூலம் 20 லட்சம் ரூபாவும் சகல அங்கத்தவர்களும் தங்களது பிரத்தியேக நிதியில் இருந்து 50,000 யும் என 15 இலட்சம் ரூபாக்களும் என மொத்தமாக 35லட்சம் ரூபாய்க்கு அந்த வேலைத்திட்டங்களை செய்து முடிப்பது என முடிவெடுத்து அழகிய முறையில் அந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்ந 7 ஏக்கர் இடம் மறைந்த முன்னால் தவிசாளர் மர்ஹும் சுலைமான் அவர்களால் வாங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி முடிப்பதற்காக வேண்டி உள்ளுராட்சி ஆணையாளரிடம் இருந்து 96 லட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

அந்த ஒதுக்கீட்டின் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் என்பவற்றை தகனம் செய்யும் இயந்திரம் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டது.

அதேசமயம் இந்த நில செப்பனிடல் வேலைகளை பூர்த்தி செய்ய ஒரு தொகை பணம் ஒதுக்கித்தருமாறு தவிசாளர் அவர்கள் முன்னால் அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு கோரிக்கை முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் ஹலீம் அந்த 4 மில்லியன் பணத்தை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரைவையில் சமர்பித்தார்.

என்றபோதிலும் துரதிஷ்டவசமாக ஏப்ரல் 21 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதனால் நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையின் காரணமாக அது கைவிடப்பட்டது. ( அமைச்சர்களின் கூட்டு ராஜினாமா )

உண்மையில் தவிசாளர் சகல அங்கத்துவர்களுடனும் இணைந்து நல்ல முறையில் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

இவ்வாறு நடைபெற்று வரும் தருவாயில்தான் அரசாங்கம் மாற்றமடைந்தது.

என்ற பொழுதிலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிரகாரம் அந்த இயந்திரம் பொருத்தப்பட்டது.
இந்த இயந்திரம் ஆரம்பித்து வைக்கப்படும் விழாவிலும் இது கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்யப்பட்ட செயற்பாடு என்பது நினைவு படுத்தப்பட்டது.

இது இப்படி இருக்க சமூக வளைதளங்களில் இது தவிசாளரினால் மட்டும் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் என்பது போல் செய்திகள் பரவ ஆரம்பித்தன. உண்மையில் இது சகல அங்கத்தவர்களும் கூட்டாக இணைந்து செய்த வேலைத்திட்டம் என்பதே உண்மை.

இது இவ்வாறிருக்க இப்பொழுது மீண்டும் அந்த பிராந்திய மக்கள் அந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அடிக்கடி கண்டனங்களை தெரிவித்து வருகின்றன படியால் அங்கிருக்கும் குப்பைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்காக வேண்டி மீண்டும் 96 லட்சம் ரூபாய்கள் பெறுமதியில் மாற்றிடத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் செயன்முறை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் போது பிரதேச சபை உறுப்பினர் அல்விஸ் அவர்கள் பிரதேச சபையின் கடந்த மாதாத்த கூட்ட தொடரில் உரையாற்றும் போது முன்னய திட்டம் ஒரு சிலரால் மாத்திரம் செய்யப்பட்டதாக சமூக வளைதளங்களில் பரப்புரை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதோடு இந்த புதிய திட்டத்திற்கான பெயர் பலகையில் சகல அங்கத்தினர்களின் பெயர்களும் பொறிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

அதனை எதிர் வரும் கூட்டத்தில் முடிவு செய்வது என உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டமானது சகல பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட விடயமே அன்றி ஒரு நபரின் தனிப்பட்ட முயற்சி அல்ல என்பதுதான் யதார்த்தமான உண்மை. (அஜ்மீர் பாரூக் எதிர் கட்சி தலைவர் அக்குறணை பிரதேச சபை)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters