விமான நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான செய்தி.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலா பயணிக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பணிகள் மேலும் தாமதமாகலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுலாத்துறையினர் மூலம் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் வேறு வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதன் பின்னரோ விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Previous articleத பின்னான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான முக்கிய செய்தி
Next articleமுகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை, தீவிர கண்கானிப்பில் பொலிஸார் – மக்களுக்கு எச்சரிக்கை