றஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரி – புதிய மாணவர் அனுமதி 2024

AL – RAHMAANIYYAH ARABIC COLLEGE – AKURANA

மத்திய மலைநாட்டின் அக்குறணை நகரில் சன்மார்க்கக் கல்விப் போதனையில் 50 வருடங்களைக் கடந்திருக்கும் அல்-ரஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரியில் எதிர்வரும் 2024 ஆம் கல்வியாண்டுக்கு அல்குர்ஆன் மனனப் பிரிவிற்கும், ஷரீஆஹ் பிரிவிற்கும் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஷரீஆஹ் பிரிவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

  • அல்குர்ஆனைப் பார்த்து சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.
  • 2024.01.01 அன்று 14 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
  • உடல் ஆரோக்கியமும், ஆர்வமும் உள்ளவராக இருத்தல்,
  • ஹாபிழ்களுக்கும். G.C.E. O/L பரீட்சையில் தோற்றியவர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.

ஹிப்ழ் பிரிவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

  • அல்குர்ஆனை பார்த்து சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.
  • 2024.01.01 அன்று 10 அல்லது 11 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
  • 2023 ஆம் ஆண்டில் பாடசாலையில் தரம் 5ஆம் அல்லது 6ஆம் தரத்தில் கல்வி கற்றவராக இருத்தல்.

வசதிகளும் வாய்ப்புகளும்

  • சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ஊர்.
  • மாணவர்கள் விடுதி சகல வசதிகளுமுடைய சுமார் 4000 சதுர அடிகளைக் கொண்ட மூன்று மாடி கட்டிடங்கள்
  • இரண்டு 3500 சதுர அடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய வாசிப்பு மற்றும் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வளமான வாசிகசாலை.
  • சுமார் 9000 சதுர அடிகளைக் கொண்ட விளையாட்டு மைதானம்.
  • பாதுகாப்பான. அமைதியான சுற்று சூழலைக் கொண்ட சுவாத்தியமான தளம்.

சிறப்பம்சங்கள்

  • ஷரீஆஹ் பிரிவில் ஏழு ஆண்டுகள் நிறைவில் மௌலவி சான்றிதழ் வழங்கப்படும்.
  • தகுதி. திறமை அனுபவமுள்ள உஸ்தாத்மார்கள்.
  • G.C.E.O/L, A/L பரீட்சைகளுக்குத் தோற்றல்.
  • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்திற்கான பாடங்கள்.
  • சிங்களம். தமிழ், அரபு, உருது மற்றும் ஆங்கில ஆகிய மொழியிகள் கற்பித்தல்
  • இல்ல விளையாட்டுப் போட்டிகள்.வெளிக்கள சுற்றுலா மற்றும் இவை போன்ற இன்னோரன்ன இணைப் பாடவிதான செயற்பாடுகள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2023.10.31
நேர்முகப் பரீட்சை 2023.11.11 & 2023.11.12
புதிய மாணவர் அமைதி : 2024.01.10

Principal
AI- Rahmaniyyah Arabic College
Dunuwila Road, Akurana.
0812300578
0812301004
0777447197
Email:jamiahrahmaaniyyah@ymail.com

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters