ஆசிய வல்லரசு ஒன்று இலங்கை முஸ்லிம்களை குறி வைத்ததா?

உலகளாவிய ரீதியாக மிகவும்‌ கண்‌டனத்துக்குள்ளான 2019 ஏப்ரல்‌ 21 உயிர்த்த ஞாயிறு தினத்‌ தாக்குதல்களினால்‌, முன்னூறுக்கும்‌ மேற்பட்ட அப்பாவி உயிர்கள்‌ காவு கொள்ளப்‌பட்டு, இலங்கையின்‌ பொருளாதாரமும்‌ வரலாற்றில்‌ காணாத படுவீழ்ச்சியை கண்டுள்ளது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்‌ சமூகம்‌ இன்றுவரை தலை நிமிர முடியாத அவதூறுகளுக்கும்‌, பழிச்‌ சொல்லுக்கும்‌ ஆளாக்கப்பட்‌டுள்ளமையை யதார்த்த ரீதியாக நாம்‌ உணர்ந்து கொள்ளலாம்‌.

இலங்கை அரசியலையே தலைகீழாக மாற்றியமைத்துள்ள இப்படுகொலைகளையும்‌, குண்டு வெடிப்புகளையும்‌ விசாரணை செய்யவும்‌ உண்மைகளை வெளிக்‌ கொணரவும்‌, அரச உயர்‌ மட்டத்திலான இரண்டு விசாரணை ஆணைக்குமுக்கள்‌ நியமிக்கப்பட்ட போதும்‌, இரண்‌டாவது விசாரணை ஆணைக்குழுவின்‌ விசாரணைகள்‌ இன்றுவரை முற்றுப்பெறவில்லை. எனினும்‌ விசாரணையில்‌ வெளியிடப்பட்ட பல்வேறு தகவல்கள்‌ ஊடகங்கள்‌ மூலமாக இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும்‌, அவ்வப்போது உடனடியாகவே கிடைத்த வண்ணமுள்ளன.

இக்குண்டுவெடிப்பு சம்பவங்களின்‌ முக்கிய சூத்திரதாரிகள்‌ இன்றுவரை துல்லியமாக இனங்காணப்படாத போதும்‌, இதற்கான முழுப்‌ பழியும்‌ இலங்கை முஸ்லிம்‌ சமூகத்தின்‌ மீதே சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும்‌ இக்குண்டு வெடிப்பில்‌ நேரடியாக பங்கு பற்றிய அனைவரும்‌ இலங்கை முஸ்லிம்‌ சமூகத்தை சேர்ந்தவர்களே என்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ள நிலையில்‌, இலங்கையின்‌ பெரும்‌பான்மையின மக்களும்‌, குறிப்பக இக்குண்டு வெடிப்பினால்‌ அதிகமாக படுகொலை செய்யப்பட்ட அல்லது இலக்கு வைக்கப்பட்ட கிறிஸ்தவ கத்தோலிக்க சமூகமும்‌, சர்வதேசமும்‌ இலங்கை முஸ்லிம்‌ சமூகத்துக்கு எதிரான துவேஷ, வெறுப்பு மனப்பான்‌மையுடன்‌ மனப்‌ பதிவுகளைக்‌ கொண்டிருப்பதும்‌, கருத்துக்களை வெளியிட்டு வருவதும்‌ இன்றுவரை தொடர்கதையாகவே உள்ளது.

இலங்கையின்‌ வரலாற்றில்‌ பல தசாப்‌தங்கள்‌ ‘புரட்சி’ என்ற பெயரில்‌ பயங்கரமான படுகொலைகளை செய்த ஜே.வி.பி. இயக்கத்தை சேர்ந்த சிங்கள இளைஞர்களோ, ‘தனி நாட்டுக்‌ கோரிக்கை’ என்ற பெயரில்‌ சுமார்‌ மூன்று தசாப்தங்‌களுக்கும்‌ மேலாக இந்நாட்டில்‌ பயங்கர குண்டு வெடிப்புக்களை நடாத்தியும்‌, சகோதர இனத்தவர்களை, மதத்தவர்‌களை தம்‌ பிரதேசங்களை விட்டே ஓட விரட்டி படுகொலை செய்தும்‌, இந்நாட்டின்‌ சொத்துக்களை மூர்க்கத்தனமாக அழித்தும்‌, வட மாகாணத்தில்‌ இருந்து இன சுத்திகரிப்பு செய்தும்‌, மஸ்ஜிதுகள்‌, பெளத்த தேவாலயங்‌ளுக்குள்‌ புகுந்து வணக்கத்தில்‌ ஈடுபட்‌டிருந்தவர்களை மிகக்‌ கொடூரமாகக்‌ கொலை செய்தும்‌, இந்நாட்டையே துவம்சம்‌ செய்த விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்தை சேர்ந்த இளைஞர்களோ, அவ்விளைஞர்கள் பிரதிநிதித்துவப்‌படுத்தும்‌ இனத்தினரோ அடையாத, மிக மோசமான பழியையும்‌, பகைமையுணர்வையும்‌, சகோதர இனங்களின்‌ வெறுப்பையும்‌ இலங்கை முஸ்லிம்‌ சமூகம்‌ பெற்றுள்ளதை எவரும்‌ மறுக்க முடியாது. இப்பழியையும்‌. குற்றத்‌தையும்‌ இலங்கை முஸ்லிம்‌ சமூகத்தின்‌ மீது முழுமையாக சுமத்திய வண்ணமே கடந்த ஜனாதிபதித்‌ தேர்தலிலும்‌, பொதுத்‌ தேர்தலிலும்‌ பெரும்பான்மை சிங்கள இன மக்களின்‌ பேராதரவுடன்‌ ராஜபக்ஷ (பொதுஜன பெரமுன) தரப்பு இந்நாட்டு அரசாங்கத்தை மிக இலகுவாக அமைத்துக்‌ கொண்டது.

Read:  மீண்டும் ரணில் !!

இஸ்லாத்தின்‌ போராட்ட உணர்‌வையும்‌, விடுதலை வேட்கையையும்‌ கொச்சைப்படுத்தியுள்ள, தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு சில இளைஞர்களால்‌ மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கொடூர சம்பவத்தினால்‌, இலங்கை முஸ்லிம்‌ சமூகம்‌ இன்றுவரை வெட்கித்‌ தலைகுனிந்து நிற்கின்றது. வெளியில்‌ தலை காட்ட முடியாத அளவுக்கு இலங்கை முஸ்லிம்‌ சமூகம்‌ பலத்த அவமானகரமான உணர்வை பெற்றுள்ளது. இக்கறை என்று கழுவிவிடப்படுமோ என்று சொல்ல முடியாத அளவுக்கு அதன்‌ தாக்கம்‌ வரலாற்றில்‌ ஆழப்‌பதியப்பட்டுள்ளது. முஸ்லிம்‌ சமூகத்‌திற்கு எதிரான இத்தகைய உணர்வுகள்‌, வெறுப்புக்கள்‌ இன்று காணப்படுவது
போன்று மட்டும்‌ நின்று விடப்‌ போவதில்லை. அமெரிக்காவின்‌ ‘சலிஸ்பெரி’ பல்கலைக்கழக பேராசிரியர்‌ ‘கீத பொன்‌கலன்‌’, “ஜனாதிபதி தேர்தலின்‌ பின்னர்‌ முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவித பாரிய இனவாத சம்பவங்களும்‌ பதிவாகவில்லை. பொதுத்தேர்தலில்‌ வெற்றி பெற வேண்டும்‌ என்பதற்காகவே முஸ்‌லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்‌ ஈடுபடாது இருந்ததாக நினைக்கிறேன்‌. எனினும்‌, எதிர்காலத்தில்‌ முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுமாறு இனவாத அமைப்புக்கள்‌ அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கலாம்‌. ஏப்ரல்‌ 21 தாக்குதலுக்குப்‌ பின்னர்‌ இலங்கை முஸ்லிம்கள்‌ அச்சத்தில்‌ வாழ்ந்து
வருகிறார்கள்‌” என்று குறிப்பிடுவது போன்று, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கை மக்களின்‌ குறிப்பாக சகோதர இனத்தவர்களின்‌ வெறுப்பும்‌, கசப்புணர்வும்‌ பல ஆண்டுகள்‌ நீடித்து நிலைக்கப்‌ போகின்றன.

சூத்திரதாரி சஹ்ரானும்‌ குழுவினரும்‌

இத்தாக்குதல்‌ சம்பவங்களின்‌ ஆணிவேர்‌ சஹ்ரானும்‌. அவனது குழுவினரும்‌ என்பதில்‌ எத்தகைய சந்தேகமும்‌ இல்லை. சஹ்ரானின்‌ இளமைக்கால குறிப்பாக மத்ரஸாக்‌ காலத்திலிருந்து அவனது வாழ்க்‌கையை ஆய்வுக்குட்படுத்தும்‌ போது ஒருவித விரக்தி மனப்பான்மையும்‌, வெறுப்புணர்வும்‌ அப்போதிலிருந்தே அவனிடம்‌ குடிகொண்டிருந்ததை, அவனது மத்ரஸாக்கால ஆசிரியர்‌களின்‌ கூற்றிலிருந்து அறிய முடிகின்‌றது. இந்த வெறுப்பு பேச்சுக்களின்‌ காரணமாகவே மத்ரஸாக்‌ கல்வியை அவனால்‌ முடிக்க முடியாது, மத்ரஸா விலிருந்து விலக்கப்பட்டார்‌. அதன்‌ பின்‌ அவனது குரோதங்கள்‌, பழிவாங்‌கல்கள்‌ காத்தான்குடியிலேயே மார்க்கப்‌ பிரச்சாரங்களினூடாகவும்‌, மார்க்கம்‌ சம்பந்தப்பட்ட சிறு சிறு கருத்து வேற்‌றுமைகளினூடாகவும்‌ மேலும்‌ வளர்க்‌கப்பட்டது.

Read:  மீண்டும் ரணில் !!

அதற்கேற்றாற்‌ போல்‌, ரஊப்‌ மெளலவியினதும்‌, தவ்ஹீத்வாதிகளினதும்‌ விவாத மேடை இதற்காக பயன்படுத்தப்பட்டு முடிவில்‌ வாள்‌வெட்டுக்கள்‌, அடிபிடிகளோடு முடிவுற, சஹ்ரான்‌ இச்சம்பவங்களின்‌ பின்னால்‌ பொலிஸாரினால்‌ தேடப்பட காத்தான்‌குடியிலிருந்தே தலைமறைவாகிறார்‌.அதன்‌ பிறகு அவரது பிரச்சாரங்கள்‌ முகநூலினூடாக தொடர்ந்ததை நானும்‌ பலமுறை அவதானித்துள்ளேன்‌. குறிப்‌பாக எனது முகநூல்‌ நண்பர்களாக இருந்த காத்தான்குடியைச்‌ சேர்ந்த பலரோடும்‌ அவர்‌ பலமுறை முரண்‌பட்டுக்‌ கொண்டு, கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்திருந்ததை நான்‌ கண்ணுற்றுள்ளேன்‌.

இவ்வாறு மார்க்க ரீதியாக ஒருவித குரோதமும்‌ வெறுப்புணர்வும்‌ இயற்கையாகவே குடிகொண்டிருந்த சஹ்ரானிடம்‌. இந்தளவுக்கு இலங்கையின்‌ தலைநகரில்‌ கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களையும்‌ இலங்கையின்‌ தேசிய வருமானத்தின்‌ கணிசமான ஒரு பகுதியான சுற்றுலாத்‌ துறையின்‌ முக்கிய கேந்திர ஸ்தானமான பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும்‌ இலக்கு வைத்து தற்கொலைக்‌ குண்டுதாரிகளை முன்னிறுத்தி, பயங்கரமான குண்டுத்‌ தாக்குதல்களை மேற்கொண்டு. பல நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களை பலியெடுக்குமளவுக்கு பயங்கர வெறி தோற்றம்‌ பெற்றிருக்குமா? இக்குண்டு வெடிப்‌புக்குப்‌ பிறகு இலங்கை புலனாய்வு பிரிவுகளால்‌ நாட்டின்‌ பல பாகங்களில்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ள சஹ்ரான்‌ குழுவினருக்கு சொந்தமானது என திடமாக நம்பப்படும்‌ இலங்கை நாணயப்படி 700 கோடிகளுக்கு மேற்பட்ட காணிகள்‌, இடங்கள்‌, சொத்துக்கள்‌, வங்‌கியிலிடப்பட்ட பணங்கள்‌, பிரமாண்டமான செல்வங்களை தேடிக்‌ கொள்ளும்‌ அளவிற்கு சஹ்ரான்‌ சர்வதேச ரீதியான வலைப்பின்னலைக்‌ கொண்ட, ஒரு சர்வதேச பயங்கரவாதியாக இக்குறுகிய காலத்தில்‌ மாற்றம்‌ பெற்றிருக்க முடியுமா? அது எப்படி சத்தியமானது? என்பன போன்ற பல நூறு கேள்விகள்‌ இன்றுவரையும்‌ எமது உள்ளங்களை சல்‌லடை போட்டுக்‌ கொண்டிருக்கின்றன.

Read:  மீண்டும் ரணில் !!

ஐனாதிபதி ஆணைக்குழுவில்‌ வெளியான திடுக்கிடும்‌ தகவல்கள்‌

நல்லாட்சி அரசாங்கத்தில்‌ நியமிக்‌கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்‌ விசாரணைகளில்‌ திருப்தியடையாத புதிய அரசாங்கத்தின்‌ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, புதிய விசாரணைக்‌ குழுவொன்றை நியமிப்பதாக, தமது தேர்தல்‌ பிரச்சாரத்தில்‌ அளிக்கப்பட்ட வாக்குறுதிக்‌கேற்ப, ஜனாதிபதியாகப்‌ பதியேற்றதன்‌ பின்னர்‌, உயர்நீதிமன்ற முன்னாள்‌ நீதிபதிகள்‌ அடங்கலாக ஐவர்‌ கொண்ட குழுவை நியமித்து, கடந்த பல மாதங்‌களாக அவ்விசாரணைக்குழு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும்‌ சாட்சிகளைத்‌ தொடர்ந்து பெற்று வருகின்றது. ஆணைக்குழுவின்‌ விசாரணைகள்‌ தொடர்ந்த வண்ணமுள்ளன. இவ்விசாரணைகளில்‌ அண்மைக்‌ காலமாக வெளிப்படுத்தப்பட்டு வரும்‌, ‘குண்டுவெடிப்புடனும்‌, அதன்‌ பின்னரும்‌ நடைபெற்ற பல சம்பவங்கள்‌’ தொடர்‌பாக பல சாட்சியங்கள்‌, இக்குண்டு வெடிப்புக்கு சர்வதேச ரீதியிலான பல பின்னணிகளும்‌ காணப்படுவதை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக முன்னாள்‌ உளவுப்‌ பிரிவின்‌ பணிப்பாளர்‌ நிலாந்த ஜெயவர்த்தன, சார்ஜன்‌ வசந்த சிசிரகுமார, சி.ஐ.டி. இன்‌ விசாரணை அதிகாரியான பிரதான பொலிஸ்‌ பரிசோதகர்‌ ஜானக மாரசிங்க, இரகசிய பொலிஸ்‌ பரிசோதகர்‌ அர்ஜுன்‌ மஹிந்த போன்றோரின்‌ சாட்சியங்கள்‌ இதுவரை வெளிவராத பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்‌துள்ளன. ஆசிய வல்ரைசொன்றின்‌ தொடர்புகள்‌ இவ்விசாரணை வெளிப்பாடுகளிளெல்லாம்‌ மிக முக்கியமான விடயமாக….

கட்டுரையின் தொடர்ச்சியினை படிக்க… PART 2