எனக்கு கொரோனா தொற்று உறுதி : எனக்காக பிரார்த்தியுங்கள் -சயிட் அப்ரிடி

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் விரைவில் குணமடைய எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த வியாழக்கிழமை முதல் நான் சுகயீனம் அடைந்துள்ளேன். எனது உடல் வலி அதிகரித்துள்ளது. நான் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டேன். எதிர்பாராத நிலையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் விரைவில் குணமடைய பிரார்த்தனைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் என அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தவ்பீக் உமரை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது சயிட் அப்ரிடி.