வயது  வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய குடற்புண் – GASTRITIS

Gastritis சிலருக்கு எந்த அறிகுறியையும் கொடுக்காவிட்டாலும் கடுமையான வயிற்று வலி, வாந்தி, சமிபாடின்மை போன்ற நோயறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஏற்படும் மேல் வயிற்று வலியானது கடுமையான நெஞ்சு வலியை ஒத்ததாக காணப்படலாம், இதுவே அனைவரையும் பீதி கொள்ள வைக்கிறது.

இன்று சிறியவர்கள் முதல் வயோதிபர் வரை பொதுவாக கூறும் ஒரு முறைப்பாடுதான் நெஞ்சு எரிவு அல்லது வயிற்று வலி அல்லது சில வேளைகளில் நெஞ்சு வலி. Gastritis ஆனது வயது பாரபட்சமின்றி அனைவரையும் பாதிக்கிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கமே இதற்கான பிரதான காரணமெனக் கூறலாம். இன்று இந்த வேகமான உலகில் அனைவரும் பெரும்பாலும் பரவலாக சுகாதாரமற்ற உணவு வகைகளையே உண்ணுகின்றனர் அல்லது வேலைப்பளு மற்றும் பல காரணங்களுக்காக உணவு வேளைகளை தள்ளிப் போடுகின்றனர்.

பாடசாலை செல்லும் சிறார்கள் பலரும் இதனால் அவஸ்தைப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பிள்ளைகளிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் காணப்படும் நேர முகாமைத்துவமின்மையால் அல்லது இன்னும் பல காரணங்களால் பாடசாலைச் சிறார்கள் தங்கள் காலைச் சாப்பாட்டை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்கு வெளிக்கிளம்பிச் சென்று பாடசாலை இடைவேளை நேரத்திலேயே உணவு உட்கொள்கின்றனர், ஏன் வேலைக்குச் செல்லும் வளர்ந்தவர்களும், பெற்றோரும் கூட இதற்கு விதிவிலக்கானவர்களல்லர்.

இது முற்றிலும் தவறான உணவுப்பழக்க முறையாகும். இதனால் ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்கள் வெறும் வயிற்றுடன் காணப்பட பல்வேறுபட்ட குடல் வியாதிகளுக்கு ஆளாகின்றனர். அதேபோல இன்று அவர்கள் பெரும்பாலும் junk food என்று கூறப்படும் உடனடி உணவுகளையே அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.

பாடசாலைகளை சுற்றியும், கல்வி நிலையங்களை சுற்றியும் இவ்வாறான junk food கடைகள் அதிகமாக முளைத்திருப்பதை இன்றைய காலத்தில் அவதானிக்கலாம். பெற்றோர்களும் தமது இலகுக்காக சிறார்களிடத்தில் பணத்தை வழங்க அவர்களும் சுகாதாரமான உணவுகளுக்கு பதிலாக இவ்வாறான உணவுகளையே அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.

அத்துடன் இன்று மாணவர்கள் மத்தியில் தேவையற்ற ஒரு போட்டி சிறு வயது முதலே ஏற்படுத்தப்பட்டு அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மன உளைச்சலும் குடற்புண் ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. அத்துடன் சிறுவர்களுக்கு தேவைக்கு மேலதிகமாகவே பகுதி நேர வகுப்புகள் திணிக்கப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் உளைச்சலுக்கு உள்ளாவதற்கு அப்பால் உணவு உட்கொள்ளக் கூட நேரமற்று இருக்கிறார்கள், மேலும் பல காரணங்களுக்காக உணவு வேளைகளை தவற விடுகிறார்கள்.

Gastritis ஆனது சிலருக்கு எந்த அறிகுறியையும் கொடுக்காவிட்டாலும், கடுமையான வயிற்று வலி, வாந்தி, சமிபாடின்மை போன்ற நோயறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஏற்படும் மேல் வயிற்று வலியானது கடுமையான நெஞ்சு வலியை ஒத்ததாக காணப்படலாம், இதுவே அனைவரையும் பீதி கொள்ள வைக்கிறது.

இதற்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் காணப்பட்டாலும் இது ஏற்படாமல் தவிர்ந்து கொள்ள பல நற்பழக்க வழக்கங்களே சிறந்ததாகும்.

குடற்புண் காணப்படும் பட்சத்தில் செய்ய வேண்டியவை

1 உணவு உண்ணும் போது நன்கு மென்று உண்ண வேண்டும்.
2 உணவை மெதுவாக உண்ண வேண்டும், ஒருபோதும் 10 நிமிடங்களை விட குறைவான நேரத்தில் உண்டு முடிக்க கூடாது.
3. உணவு உண்ணும்போது உடல் நேராக இருக்குமாறு அமர்ந்து இருக்க வேண்டும், அல்லது நேராக நின்ற நிலையிலும் சாப்பிடலாம்.
4 ஒவ்வொரு பிரதான உணவு வேளைக்கு முன்பாகவும் நன்கு நீர் பருகுதல் வேண்டும், சுமார் 1 அல்லது 2 குவளைகள் பருகலாம்.
5 பிரதான 3 உணவு வேளைகளுக்கு மேலதிகமாக குறைந்தது 2 வேளைகளாவது உட்கொள்ளல் வேண்டும், இதன் மூலம் வெறுமையான வயிற்றுடன் காணப்படும் நேரம் குறைவடையும்.
6 முடியுமானளவு காரத்தன்மை குறைவான உணவு வகைகளையே (low spicy foods) உட்கொள்ளல் வேண்டும்.

Gastritis வியாதி உள்ளவர்கள் செய்யக்கூடாதவை

1 தேநீர், காப்பி அல்லது கபேன் (caffeine) அடங்கிய வேறு பானங்களை அடிக்கடி அதிகம் பருகுவதை தவிர்த்தல் வேண்டும்.
2 Alcohol பாவனையை தவிர்த்தல் வேண்டும்.
3. புகைபிடித்தலை நிறுத்துதல் வேண்டும், புகைபிடித்தல் குடற்புண் குணமடைவதை தாமதப்படுத்தும்.
4. தக்காளி, கறி மிளகாய் அடங்கிய உணவு வகைகளை குறைத்தல், அதிக காரத்தன்மையுள்ள தூள் வகைகள் பாவனையை குறைத்தல்.
5. அதிக எண்ணெய் பாவனையைக் குறைத்தல் மற்றும் அதிக நெய்த்தன்மை உணவுகளையும் தவிர்த்தல்.

அதிகமாக உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

1 மரக்கறி வகைகள் :- வெண்டிக்காய், வற்றாளை, கரட், கோவா, கிழங்கு
2. பழங்கள் :- பப்பாளி, வாழைப்பழம், Avacado, திராட்சை, பாதாம்
3. நார்த்தன்மை உணவு வகைகள் :- தவிட்டுடனான அரிசி வகைகள், பார்லி, Oats
4 மீன் வகைகள் :- எண்ணெய்த்தன்மை குறைவான உணவு வகைகள்

குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

1 சிவப்பு நிற மாமிசம் அதிகளவு உட்கொள்வதை குறைத்தல்.
2 காபனேட் உள்ள குளிர்பானங்கள்
3 அதிகளவு மிளகாய் அடங்கிய உணவு வகைகள்.
4 Orange/அத்திப்பழம் (grape fruit)/அன்னாசி
5 Processed meat (eg: canned beef/sausages….)
6 போப் கோண் (pop corn)
7 cookies வகைகள், கேக், டோணட், French fries, நிலக்கடலை, முந்திரிப் பருப்பு.

இவ்வாறு முறையான உணவுப்பழக்கத்தை பேணுவதன் மூலம் குடற்புண் மட்டுமல்லாது, இன்று மனிதர்கள் மத்தியில்பெரும் சுமையாக உள்ள பல்வேறுபட்ட தொற்றாத நோய்கள் என்று கூறப்படும் நீரிழிவு நோய். உயர்குருதியமுக்கம் (high blood pressure), கொலஸ்திரோல் முதலான பல நோய்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்.

வைத்தியர் சிப்கா வஜீஹு- BUMS (Colombo) (25.02.2022 அன்று மெட்ரோ News இதழில் வெளியானது)

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page

Free Visitor Counters