மாடறுப்பு நிறுத்தும் முயற்சி – முஸ்லிம்கள் பதற வேண்டியதில்லை

மாட்டிறைச்சி உண்ண வேண்டும்‌ என்பது இஸ்லாத்தின்‌ ஐம்பெரும்‌ கடமைகளில்‌ ஒன்றோ அல்லது மாட்டிறைச்சி வியாபாரம்‌ மாத்திரம்‌ தான்‌ அனுமதிக்கப்‌பட்ட வியாபரமோ கிடையாது என்பதை நிரூபிக்கும்‌ மற்றொரு சந்தர்ப்பத்தை பிரதமர்‌ ஏற்படுத்தி தந்துள்ளார்‌.

இதனை முஸ்‌ லிம்கள்‌ தமது உயிரை மாய்க்க வேண்டிய ஒன்றாக உற்று நோக்க வேண்டிய எந்தவித கட்டாயமும்‌ கிடையாது.

இவ்வாறான அறிவிப்புக்கள்‌ ஆங்காங்கே எழும்‌ போது முஸ்லிம்கள்‌ பதறி அடித்துக்‌ கொண்டு தமது உரிமைகள்‌ என பதிவுகள்‌ இடுவதையும்‌, குறுகிய அரசியல்‌ இலாபங்கள்‌ தேடும்‌ அரசியல்‌ வாதிகள்‌ இதனை பயன்படுத்தி அப்பாவி முஸ்லிம்களை தூண்டுவதை விட்டும்‌ தவிர்ந்து முஸ்லிம்‌ சமூகத்தை புதிய சிந்தனைமிக்க வழியின்‌ பால்‌ இட்டுச்‌ செல்ல உதவ வேண்டும்‌.

இதற்காக முஸ்லிம்களின்‌ உரிமைகள்‌ காவு கொள்ளப்படும்‌ போது அதற்காக குரல்‌ கொடுக்காமல்‌ வாய்‌ மூடி மெளனிகளாக இருக்க வேண்டும்‌ என்பது கருத்‌தல்ல. உரிமைகள்‌ எது எவற்றிற்கு குரல்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதை வழிகாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம்‌ அமைப்புக்களுக்கு இருக்கின்றது. அதே போன்று புத்திஜீவிகளும்‌ இது தொடர்பில்‌ பாரிய கவனம்‌ செலுத்த வேண்டும்‌. எமது முன்னோர்களை இவற்றிற்கு முன்னுதாரணமாக எடுத்து செயற்பட முன்‌ வரவேண்டும்‌.

மாடறுப்பை பொறுத்தவரை முஸ்லிம்‌களுக்கு வருடாந்த தமது உழ்ஹிய்யா கடமையில்‌ மாத்திரமே சிறிது பிரச்சினை இருக்கின்றது. அதனையும்‌ மார்க்க வழி காட்டலுக்கு அமைவாக ஆட்டை அறுப்‌பதினூடாக நிறைவேற்றிக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ இவ்வாறாக ஒரு சமூகத்தை சிறிது கிள்ளிப்பார்க்கின்ற சட்டங்களை உருவாக்குவதன்‌ பின்புலத்தில்‌ சிறிய இலாபங்‌களை தேடும்‌ அதே அரசாங்கங்களுக்கு பாரிய பிரச்சினை இருப்பதை யாராலும்‌ மறுக்க முடியாது. அறிவு ரீதியாக சிந்திப்‌பவர்களுக்காக சில எண்ணிக்கை சார்‌ தரவுகளை முன்‌ வைக்கின்றேன்‌.

ஒரு நாளைக்கு அனுமதி பெற்று அறுக்‌கப்படும்‌ மாடுகளின்‌ எண்ணிக்கை 5000 என தரவுகள்‌ சுட்டிக்காட்டுகின்றன. இது வருடமொன்றிற்கு 1825000 (பதினெட்டு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம்‌) ஆகும்‌. அப்படியாயின்‌ இவ்வரசாங்கம்‌ ஆட்சியில்‌ இருக்கும்‌ 5 வருட காலத்திற்குள்‌ இலங்‌கையில்‌ அறுக்கப்படாத மாடுகளின்‌ எண்ணிக்கை 9125000 (தொன்னூற்றி ஒரு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரமாக) மாறிவிடும்‌. இது தவிர 5 வருடங்களில்‌ கன்றுகளை ஈன்ற மாடுகள்‌, முஸ்லிம்கள்‌ மற்றும்‌ ஏனைய மதத்தவர்களின்‌ மார்க்க அனுஷ்‌டானங்கள்‌, பூஜைகளுக்காக அறுக்க வேண்டியவை என அனைத்தையும்‌ ஒன்று சேர்த்தால்‌ சுமார்‌ 1.5 கோடி மாடுகள்‌ இலங்‌கையில்‌ அதிகரித்து இருக்கும்‌. இவற்றின்‌ பராமரிப்பு. இவற்றுக்கான உணவு, இவற்றின்‌ மூலம்‌ ஏற்படும்‌ பிரச்சினைகள்‌ என யாராலும்‌ சிந்திக்க முடியாத ஒரு நிகழ்வை எதிர்பார்க்கலாம்‌.

அப்படி இல்லையாயின்‌ அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்‌. உண்மையான நோக்கத்திற்‌காக இதை தடை செய்திருந்தால்‌ ஏற்றுமதியும்‌ செய்ய முடியாது. இறக்குமதியும்‌ செய்ய முடியாது. அப்படி அல்லாமல்‌ இந்‌தியாவை போன்று ஏற்றுமதி செய்ய முன்‌வருவார்களானால்‌ அதனை ஒரு போதும்‌ ஏற்கவும்‌ முடியாது.

மறுபுறம்‌ மாட்டை வளர்த்து இறைச்சிக் காக விற்பனை செய்பவர்களில்‌ அதிகமானவர்கள்‌ பெளத்தர்களே ஆவார்கள்‌. அப்படியாயின்‌ அவர்களின்‌ வியாபாரம்‌ பொருளாதாரம்‌ வீழ்ச்சியை நோக்கி தள்‌ளப்படும்‌. இதனையும்‌ அரசு சிந்திக்க வேண்டும்‌. அவ்வாறு பால்‌ உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகளும்‌ அதன்‌ காலம்‌ முடிவடையும்‌ போது என்ன செய்வதென்ற பிரச்சினையும்‌ இங்கே எழும்‌.

அது மாத்திரமல்ல இன்றைய நாட்களில்‌ அரசுக்கு மாட்டிறைச்சி கடைகளால்‌ அனுமதிப்பத்திரங்கள்‌ மூலம்‌ பல இலட்சக்‌கணக்கான ரூபாய்கள்‌ பெறப்படுகின்றன. அதனை நிறுத்துவதனால்‌ அந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும்‌ அவர்களையே சார இருக்கின்றது.

மாடறுப்பை நிறுத்துவது என்பது உண்‌மையில்‌ உயிர்களை கொல்லக்‌ கூடாது என்பதற்காக இருந்தால்‌ நாட்டில்‌ உணவாக கொள்ளும்‌ மீன்‌ வகைகளும்‌, இலங்கை மக்கள்‌ விரும்பி உண்ணும்‌ கருவாடு, நெத்தோலி போன்றவையும்‌, மறுபுறம்‌ நாளாந்தம்‌ அறுக்கப்படும்‌ பன்றிகளும்‌. அனைத்து உணவுகளுடனும்‌ தோழமை கொண்ட கோழி ஆகியவற்றிற்கும்‌ உயிர்‌ இருக்கின்றது என்பதை தெளிவாக அனைவரும்‌ புரிந்து வைக்க வேண்டும்‌.

இது தவிர விவசாயத்தை ஊக்குவிக்கும்‌ அரசு விவசாயத்தை பூச்சிகளில்‌ இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும்‌ பூச்சி கொல்‌லிகள்‌ மூலம்‌ இறக்க நேரும்‌ உயிருள்ளபூச்சிகள்‌ தொடர்பாகவும்‌, விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட தாவரங்களுக்கும்‌ உயிருள்ளதென்றால்‌ அதன்‌ உயிர்‌ பற்றியும்‌ அரசு சிந்திக்க வேண்டும்‌.

இவற்றையும்‌ மீறி சட்டங்கள்‌ கொண்டு வரப்பட்டால்‌ தோல்‌ உற்பத்திகள்‌, சுற்‌றுலா பயணிகளின்‌ நாளாந்த உணவுத்‌தேவை, வெளிநாட்டு மற்றும்‌ உள்நாட்டு முதலீட்டு உணவகங்கள்‌ என அனைத்தினதும்‌ வருமானங்கள்‌ அலை அலையாக குறைந்து விடும்‌. அப்போது அவற்றிலிருந்து பெறப்பட்டு வந்த அரசாங்கத்தின்‌ வரிகள்‌ அனைத்தும்‌ தடைப்பட்டு ஏற்கனவே பொருளாதரத்தில்‌ பாதாளத்திற்கு சென்றுள்ள இலங்கையை மீள்‌ கட்டியெ முப்புவதென்பது கனவாகவே இருந்துவிடும்‌.

மற்றொருபுறம்‌ நாளாந்தம்‌ அரசாங்‌கத்தால்‌ சிங்கத்திற்கும்‌, புலிக்கும்‌ வழங்குகின்ற இறைச்சிக்கும்‌, நாட்டை காப்பதில்‌ அரசியல்வாதிகளை விட தமது உயிரை துச்சமென மதித்து செயற்பட்டு வரும்‌ இரானுவத்தினரின்‌ புரோட்டின்‌ உணவிற்‌காக வழங்கும்‌ இறைச்சி போன்றவற்றிற்கு எவ்வாறானதொரு மாற்று வழியை உயர்‌ சபையான பாராளுமன்றம்‌ முன்வைக்கப்‌ போகின்றது?

இவை அனைத்தும்‌ ஒருபுறமிருக்க மாடறுப்பு தடையை முன்வைத்த பிரதமர்‌, இந்‌நாட்டின்‌ 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தவர்‌ என்ற வகையில்‌ 30 வருட யுத்த நிறைவிற்கு பின்னர்‌ வடக்கு நோக்கி செல்கையில்‌ அவரும்‌, சாரை சாரையாக விடுதலை புலிகளின்‌ இடத்தை பார்வையிட சென்ற ஏனைய அனைவரும்‌ பாரியளவில்‌ கைவிடப்பட்ட மிருகங்களின்‌ வளர்ச்சியானது மனிதர்கள்‌ வாகனங்களில்‌ செல்ல முடியாதளவு மாறியிருந்ததையும்‌ ஆங்காங்கே இறந்து துர்வாடை வீசிய நிலையில்‌ கிடந்ததையும்‌ அவதானித்திருப்பீர்கள்‌.

இந்த நிலை வடக்கில்‌ மாத்திரமே என்றால்‌ முழு இலங்கையிலும்‌ மாடறுப்பு நிறுத்தப்பட்டால்‌ மீண்டும்‌ அந்த நிலையை கண்டு கொள்ள நீண்ட நாட்கள்‌ தேவைப்‌ படாது என்பதே யதார்த்தமாகும்‌. எனவே முஸ்லிம்கள்‌ இது விடயத்தில்‌ பதற்றங்கள்‌, முந்துதல்கள்‌ இல்லாமல்‌ மிகவும்‌ நிதானமாகவும்‌, இதனால்‌ எம்மை விட பாரிய நஷ்டங்களையும்‌ பின்னடைவுகளையும்‌ அரசாங்கமே சந்திக்க நேரிடும்‌ என்பதை நினைவில்‌ நிறுத்தி செயற்பட முன்‌ வர வேண்டும்‌.

அதே நேரம்‌ இது பொதுவான ஒரு விடயம்‌ என்பதால்‌ நிறுத்தினால்‌ என்ன நிறுத்தா விட்டால்‌ என்ன என்ற ஒரு போக்குடன்‌ நாம்‌ முன்னேறி நகர்வதானது தன்னை தானே சுட்டுக்‌ கொண்ட ஒன்றாக அவர்கள்‌ இதனை கண்டு கொள்ள வாய்ப்பிருக்கின்றது.

அது மாத்திரமல்ல நாமது வியாபாரிகள்‌ புதிய வியாபார பயணத்தை துவங்கி செல்லும்‌ அதே நேரம்‌ மீண்டும்‌ அனுமதி கிடைக்கப்பெற்றால்‌ நாம்‌ அதனை மீண்டும்‌ தொடர்வதற்கான முன்‌ ஏற்பாடுகளை செய்ய முன்‌ வர வேண்டும்‌.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page