முஸ்லிம் விவாக சட்டம் – ஜ.உலமா சபையின் நிலைப்பாட்டை கோருகிறார் அலி-சப்ரி

முஸ்லிம்‌ விவாக விவாகரத்து சட்‌டத்தில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்‌ தொடர்பில்‌ நீதியமைச்சர்‌ ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமாவின்‌ நிலைப்பாட்டினைக்‌ கோரியுள்ளார்‌. இது தொடர்பில்‌ அவசரமாக ஒன்று கூடி ஆலோசனைகளை முன்‌ வைக்குமாறும்‌ அவர்‌ வேண்டியுள்ளார்‌.

நீதியமைச்சர்‌ அலி சப்ரிக்கும்‌ அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா சபைக்கும்‌ இடையிலான சந்திப்‌பொன்று கொழும்பில்‌ அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா சபையின்‌ தலைமைக்காரியாலயத்தில்‌ உலமா சபையின்‌ தலைவர்‌ அஷ்ஷெய்க்‌ ரிஸ்வி முப்தி தலைமையில்‌ இடம்பெற்றது. இச்சந்திப்பில்‌ கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்‌ நீதியமைச்சர்‌ இவ்வாறு கோரியுள்ளார்‌.

அவர்‌ தொடர்ந்து கருத்து தெரிவிக்‌கையில்‌, “முஸ்லிம்‌ விவாக விவாகரத்து சட்டத்தில்‌ விரைவில்‌ கட்டாயமாக திருத்‌தங்கள்‌ செய்யப்படும்‌. சமூகத்இன்‌ உரிமைகள்‌ பாதுகாக்கப்படும்‌. அதே வேளை முஸ்லிம்கள்‌ நாட்டுப்‌ பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்‌ என்றார்‌.

இச்சந்திப்பு தொடர்பில்‌ அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா சபையின்‌ இணைச்‌ செயலாளர்‌ எம்‌. எஸ்‌.எம்‌. தாஸிம்‌ மெளலவி கருத்துத்‌ தெரிவிக்‌கையில்‌, உலமா சபை திருத்தங்களை சிபாரிசு செய்துள்ள முன்னாள்‌ நீதியரசர்‌ சலீம்‌ மர்சூபின்‌ தலைமையிலான குழு விடம்‌ ஏற்கனவே பரிந்துரைகளைச்‌ சமர்ப்‌பித்துள்ளோம்‌.

தற்போதைய சூழலில்‌ எவ்வாறான திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட வேண்‌டுமென உலமா சபை ஒன்று கூடி ஆராயவுள்ளது. நீதியமைச்சருடன்‌ இரண்டாம்‌ கட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்‌ தனியார்‌ சட்டம்‌ பாதுகாக்கப்பட வேண்டும்‌. ‘ஒரே நாடு ஒரே சட்டம்‌’ என்ற கொள்கையின்‌ கீழ்‌ இச்சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படக்‌ கூடாது என்பதை நீதியமைச்சரிடம்‌ தெரிவித்துள்ளோம்‌. சம்பந்தப்பட்ட தரப்புகளின்‌ கருத்துகளை கேட்டே சட்டத்தில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்படும்‌ என அமைச்சர்‌ உறுதி வழங்கியுள்ளார்‌ என்றார்‌.

முஸ்லிம்‌ விவாக விவாகரத்துச்‌ சட்‌டத்தில்‌ தேவையான திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம்‌ ஆண்டு அப்போதைய நீதியமைச்சர்‌ மிலிந்த மொரகொட சலீம்‌ மாசூப்‌ தலைமையில்‌ குழுவொன்றினை நியமித்திருந்தார்‌. இக்‌ குழுவில்‌ நீதிபதிகள்‌ ஜனாதிபதி சட்டத்தரணிகள்‌, புத்திஜீவிகள்‌, அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா சபையின்‌ பிரதிநிதிகள்‌ பெண்கள்‌ அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ அங்கம்‌ பெற்றிருந்தன.

இக்குழு இரண்டாகப்‌ பிளவுபட்டு அறிக்கையை 2018 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ அப்போதைய நீதியமைச்சர்‌ தலதா அத்துகோரளவிடம்‌ கையளித்தது. இந்த அறிக்கை இரு பிரிவுகளாக அமைந்தஇிருந்‌தன. முஸ்லிம்‌ சமூகம்‌ சட்ட திருத்தத்தில்‌ ஒரே நிலைப்பாட்டில்‌ இல்லை என்பதை இந்த அறிக்கைகள்‌ தெளிவுபடுத்தின. இதனால்‌ நீதியமைச்சர்‌ சிபாரிசுகளுக்கு அங்கோரம்‌ வழங்கும்‌ பொறுப்‌பினை அப்போதைய முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களிடம்‌ ஒப்படைத்தார்‌.

முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி நீண்‌டகாலமாக இழுபறியிலிருந்த சட்ட திருத்தங்களுக்கு இறுதி அங்கீகாரம் வழங்கினார்கள்‌ என்றாலும்‌, அரசியல்‌ களநிலை காரணமாக முஸ்லிம்‌ விவாக, விவாகரத்து சட்ட திருத்தங்கள்‌ அங்கீரிக்கப்‌பட்டும்‌ இதுவரை சட்டவாக்கம்‌ பெறவில்லை.

இத்திலையிலே புதிய நீதியமைச்சர்‌ முஸ்லிம்‌ தனியார்‌ சட்டத்தில்‌ திருத்தங்களை விரைவுபடுத்தவுள்ளார்‌. (ஏ.ஆர்‌.ஏ. பரீல்‌)

SOURCEவிடிவெள்ளி 11-09-20