வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களுக்கான வருடாந்த வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இருப்பது கட்டாயமென மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் தேவையில்லையென வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் அவ்வாறான எந்த ஒரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

வாகன புகைபரிசோதனையை நீக்குவது தொடர்பில் கொள்கை முடிவு ஒன்று எடுக்கப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?