எதனை சேமிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லையா?

பொதி செய்யப்பட்டிருக்கும்‌ பொருட்களின்‌ விலைகளை ஞாபகத்தில்‌ வைத்திருக்க முடியாத அளவுக்கு பொருட்களின்‌ விலைகள்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்‌ துக்கொண்டே செல்கின்றன. ‘எரிபொருட்களின்‌ விலைகள்‌ மீண்டும்‌ அதிகறிக்கும்‌ சாத்தியம்‌’ என்ற செய்தியைக்‌ கேட்டவுடனேயே, வர்த்தகர்கள்‌ பலரும்‌ விலைகளை மாற்றத்‌ தொடங்கிவிடுவர்‌.

அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களின்‌ விலைகளும்‌ தங்களுக்கு ஏற்றவாறு மாற்றப்படுகின்றன. ‘இந்தக்‌ கடை இல்லாவிடின்‌ என்ன? அடுத்த கடையில்‌ வாங்கிக்கொள்வோம்‌’ என நினைக்கவோ, வர்த்தகர்களுடன்‌ பேரம்‌ பேசுவதற்கோ நுகர்வோர்‌ விரும்புவதே இல்லை. ஏனெனில்‌, அடுத்தடுத்த கடைகளில்‌ இல்லாவிடின்‌, வெறுங்கையுடன்‌ வீட்டுக்குச்‌ செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுமென்ற அச்சம்‌ சூழ்கொண்டுவிடும்‌.

எனினும்‌, மிகவும்‌ குறைந்தவிலையில்‌ கிடைக்கும்‌ அத்தியாவசியமான பொருட்களை பெரும்பாலானவர்கள்‌ சேமித்துக்கொள்கின்றனர்‌. கையில்‌ தேவைக்கு மேலதிகமாக பணம்‌ இருப்பவர்கள்‌, பற்பசை, சவர்க்காரம்‌ உள்ளிட்டப்‌ பொருட்களை இரண்டொரு மாதங்களுக்கு கூடுதலாக வாங்கிக்கொள்வர்‌. இதனை பார்த்ததும்‌, தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ அல்லது விலை அதிகரித்‌ துவிடுமோ எனும்‌ அச்சத்தில்‌ சிலர்‌ வாங்கிக்கொள்வர்‌.

அரிசி, நெல்‌ உள்ளிட்டவற்றையும்‌ வாங்கி வைத்துக்கொள்வோரும்‌ இருக்கத்தான்‌ செய்வார்கள்‌. எனினும்‌, அரிசியை பல மாதங்களுக்கு வைத்திருக்கமுடியாது என்பது பலருக்கும்‌ புரிவதே இல்லை. அதற்குப்‌ பதிலாக, ஒரிரு மாதங்களுக்கு வைத்து சாப்பிடக்கூடிய தின்பண்டங்களை தயாரித்துக்கொள்வது உசிதமானது.

அதைத்‌ தயாரிப்பதற்கும்‌ எரிபொருள்‌ தேவை. அதற்காக நின்றிருக்கும்‌ வரிசைகள்‌ குறையவே இல்லை. எரிபொருட்களை பதுக்கி வைப்பதும்‌ குறைவில்லாம்‌ நடக்கிறது. பதுக்கிவைக்கும்‌ எரிபொருட்களை தேடும்‌ பணிகளும்‌ தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டோவில்‌ எரிபொருள்‌ தாங்கி இருக்கும்‌ பகுதியில்‌, 20 வீற்றர்‌ கொள்ளவு கொண்ட, பெரிய கேன்‌ ஒன்றை வைத்து எரிபொருள்‌ நிரப்பப்பட்டும்‌ உள்ளன.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

இதற்கிடையில்‌, விரைவில்‌ தீப்பற்றிக்‌ கொள்ளும்‌ எரிபொருட்களை வீடுகளில்‌ பாதுகாப்பற்ற முறையில்‌ சேமித்து வைப்பதால்‌ உயிராபத்துகளும்‌ ஏற்படுகின்றன. கஹதுடுவ, மாகம்மன எனுமிடத்தில்‌ கீழ்மாடியில்‌ இருந்து திடீரென பரவிய தீயால்‌, தாயும்‌ தந்தையும்‌ மரணித்துள்ளனர்‌. அவ்விருவரின்‌ இரண்டு பெண்‌ பிள்ளைகளும்‌ கடும்‌ தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

கீழ்மாடியில்‌ பாதுகாப்பற்ற முறையில்‌ சேமித்து வைத்திருந்த பெற்றோலில்‌ இருந்தே தீ பரவியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில்‌ இருந்து தெரியவந்துள்ளது. ஆகையால்‌, தேவைக்கு மட்டுமே கொள்வனவு செய்துகொண்டு பயன்படுத்தினால்‌, இவ்வாறான மரணங்களை தவிர்த்துக்கொள்ள மூடியும்‌.

அதுமட்டுமன்றி, பதுக்கிவைத்திருந்து பன்மடங்கு விலைக்கு எரிபொருட்களை விற்பனைச்‌ செய்வோரும்‌, அதனை வாங்குவோரும்‌ இருக்கத்தான்‌ செய்கின்றனர்‌. அவ்வளவுக்கு அவசரம்‌ நிறைந்த உலகில்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‌. ஆக, சேமிக்க வேண்டும்‌ என்பதில்‌ மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும்‌, காலத்‌ துக்கு ஏற்றவகையில்‌ சேமிப்பில்‌ கவனம்‌ செலுத்துவதே முக்கியம்‌. எரிபொருட்களை சேமித்தல்‌ சட்டவிரோதமானதும்‌ பாதுகாப்பற்றதும்‌ என்பதை நினைவில்‌ கொள்க!

Tamil-Mirror 28/6/22 Page 06