வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதி

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் சட்ட ரீதியிலான வழியில் இலங்கைக்குப் பணம் அனுப்பும்போது, அவர்கள் அனுப்பும் பணத்துக்கமைய மின் சக்தியினால் செயற்படும் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றுத்தரப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் சட்ட ரீதியிலான வழியில் பணம் அனுப்பும்போது, அவர்கள் அனுப்பும் பணத்திற்கமைய மின் சக்தியினால் செயற்படும் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றுத்தரப்படும். அத்துடன் தீர்வை வரி நிவாரணமற்ற, வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் ஒன்றை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க இருக்கின்றேன்.

மேலும் தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் சட்ட ரீதியில் வங்கி முறை ஊடாக பணம் அனுப்பும், வெளிநாடுகளில் தொழில் புரிவொருக்கு மாத்திரம் இந்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்.

அத்துடன் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களின் கனவாக இருந்துவரும், வீட்டுக்கனவை நிஜமாக்குவதற்கு, மிகவும் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற்றுக்கொடுக்கும் முறைமை ஒன்றையும் அறிமுகப்படுத்தவும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page