மேலதிக வகுப்பு சம்பந்தமாக ஓர் விசேட செய்தி.

மேலதிக வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி ஜுன் மாதம் 29 என திருத்தம் செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 15 ஆம் திகதி; மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த திகதி ஜுன் 29 என திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக வகுப்பை நடத்தும் இடத்தின் வசதிக்கு ஏற்றவாறு, சமூக இடைவெளியுடன், ஒரு மேலதிக வகுப்பில் பங்கேற்கக்கூடிய மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 100 க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், 100 மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்வதற்கு வசதியற்ற மேலதிக வகுப்புகளில், வழமையாக கல்வி கற்கும் எண்ணிக்கையிலான மாணவர்களை மாத்திரமே அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழிபாட்டுத் தலங்களை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பேணியவாறு எந்தவொரு வழிபாட்டுத் தலத்திலும் அனுமதிக்கப்படக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு