அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை – ம.மா கல்வி அமைச்சு செயலாளரின் வாழ்த்துச் செய்தி

அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2012ஆம் ஆண்டு மாதிரி ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை பல சாதனைகளை மரபுரிமையாகப் பெற்றுள்ள இக்கல்லூரி மாதிரிப் பாடசாலையின் கருத்தை உணர்ந்து. மாகாணத்தில் தனித்துவமான பாடசாலையாக மாறி சமூகம் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

கடந்த காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கத் தேவையான வாழ்க்கைக்கான வழி முறைகளை நீங்கள் வளர்த்திருக்கலாம். மேலும் உடல், சமூக, உயிரியல் மற்றும் பௌதீக விடயங்களுடனும் நல்லுணர்வுள்ள தொடர்புகள் மூலமூம் வெற்றியை அனுபவிக்கக்கூய அடிப்படைத் தேர்ச்சிகளுடன் கூடிய நல்ல குழந்தைகளை தேசத்திற்கு வழங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கல்வியின் தேசிய இலக்குகளை அடைவதற்கான நற்பண்புகளையும் நெறிமுறைகளை யும் குழந்தைகளின் மனதில் பதியவைப்பது பள்ளி அமைப்பின் பொறுப்பாகும். இது தான் சகல மதத்தினதும் எதிர்ப்பார்ப்புமாகும். இதனை வழங்கும் முயற்சியினை தங்களது பாடசாலைச் செயற்பாடுகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. குழந்தைகளின் மனதில் இத்தகைய தரமான எண்ணங்களை உருவாக்குவதில் நடைமுறை அனுபவத்தை வழங்குவதோடு பள்ளிக்கும் சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதும். கல்வியின் தனித்துவமான அம்சங்களும், அத்தகைய நினைவுப்பதிவுகள் மற்றும் கௌரவமான குறிப்புகளும் விலைமதிப்பற்றவை. அவ்வாறான கல்வியை வழங்குவதற்கான ஆய்வு, அறிவுச் செயற்பாடுகளில் ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர்.

மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத்திறன்களுக்கு முன்னோடியாக அவர்களை மாற்றுவதில், பங்களிக்கின்ற கல்லூரியின் ஆசிரியர்களைப் பாராட்டுகின்றேன். பள்ளியின் முதல்வர் திருமதி. எஸ். ஏ.எப். ஜிம்னாஸ் அவர்களின் பங்களிப்பையும்
பாராட்டுகின்றேன்.

Read:  19 May - Thursday, Today Doctors - இன்றைய வைத்தியர்கள்

மக்களின் நிலைபேண்தகு தன்மைகளை கல்வியானது உறுதி செய்ய வேண்டும். புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொ டுக்கும் வகையில் கல்வியின் தேசிய நோக் கத்தை மேலும் மேம்படுத்தி, தீவிரமாக முன் னோக்கிச் செல்லும் பணியின் வெற்றியை அடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.