மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் , பஸ்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும் சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது பேருந்துகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சி.எல். சிசில்

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!