இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் வெகுவாக உயர்கிறது

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் விலையை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு கடந்த 7ஆம் திகதி வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் 400 கிராம் பொதி ஒன்றின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 டொலர்களில் இருந்து 5.30 டொலர்களாக உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதி 202 ரூபாவில் இருந்து 280 ரூபாவாக அதிகரித்ததன் காரணமாக பால் மாவின் விலையும் அதிகரித்துள்ளது. (அருண.)