பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க முடிவு

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமுள்ள பெருமளவிலான பேக்கரிகளை மூடிவிட நேர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன அது தொடர்பில் தெரிவிக்கையில்:  

நாட்டிலுள்ள 7,000பேக்கரிகளில் 3,500பேக்கரிகள் உற்பத்தி நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அதேவேளை மா மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி நிலை காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  தினகரன் – (2022-03-09 10:33:32)

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!