பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சர்ச்சை

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கமைய பாடசாலை நிறைவடையும் நேரம் மற்றும் உயர்தரம், புலமை பரிசில் பரீட்சை ஆகியனவற்றை விரைந்து நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவழிபாட்டுத் தலங்களை மீள திறப்பதற்கு அனுமதி
Next articleதேசிய அடையாள அட்டையை சேவை 22 ஆரம்பம்.