உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு 1000 நாட்கள் கடந்து சென்­று­விட்­டன. தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் நினை­வு­களை மீட்­டிப்­பார்த்து இன்றும் கண்ணீர் சிந்­திக்­கொண்­டி­ருக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அந்த நினை­வுகள் அத்­தனை கொடூ­ர­மா­னவை.

அண்­மையில் பொரளை சகல பரி­சுத்­த­வான்­களின் ஆல­யத்தில் கைக்­குண்­டொன்று வெடிக்­க­வி­ருந்த நிலையில் கண்டு பிடிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மக்­களின் மனதில் மீண்டும் நினை­வுக்கு வந்­துள்­ளன. கடந்த வாரங்­களில் இச்­சம்­பவம் பற்­றியே பேசப்­பட்­டது.

இங்கு நாம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­வ­தற்கு தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு வலுச்­சேர்த்த பெண்­களைப் பற்றி விப­ரிக்­கிறோம்.

இஸ்­லா­மிய ஆட்­சி­யொன்­றினை நிறு­வு­வ­தற்­காக தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் மொஹமட் சஹ்­ரா­னுடன் பலி­யான தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­கு­த­லுக்கு முன்­தினம் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டு வீடியோ பதி­வொன்­றினை வெளி­யிட்­டனர். இந்த வீடியோ சமூ­கத்தில் பெரும் சர்ச்­சை­களைத் தோற்­று­வித்­தது. இது இரண்டு மணித்­தி­யா­லங்கள் 15 நிமி­டங்­களை உள்­ள­டக்­கிய வீடியோ பதி­வாகும்.

தற்­கொலை குண்­டு­தா­ரிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பிற்­பகல் 01.12 இலி­ருந்து பிற்­பகல் 3.32 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் இந்த வீடியோ பதி­வினை மேற்­கொண்­டுள்­ளார்கள். அதா­வது உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் மாத தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு முன்­னைய தின­மாகும்.

சாரா ஜெஸ்மின்
இந்த வீடியோ கல்­கிசை ஸ்பேன் டவர் மாடி வீட்டுத் தொகு­தியில் 9 ஆம் மாடியில் 3 ஆவது வீட்­டி­லி­ருந்தே பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் உறுதி செய்­துள்­ளார்கள். வீடியோ பதி­வினை கண்­கா­ணித்­த­போது அந்­தப்­ப­திவில் தங்க வளை­ய­லொன்று அணிந்­தி­ருந்த பெண் ஒரு­வரும் இருந்­துள்­ள­மையை விசா­ர­ணை­யா­ளர்கள் அடை­யாளம் கண்­டுள்­ளனர். அந்­தப்பெண் புலஸ்­தினி மகேந்­திரன் அல்­லது சாரா ஜெஸ்மின் என அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

புலஸ்­தினி மகேந்­திரன் அல்­லது சாரா ஜெஸ்மின் என்னும் பெண் யார்? கட்­டு­வாப்­பிட்­டிய ஆல­யத்தில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய தற்­கொலை குண்­டு­தாரி மொஹமட் ஹஸ்தூன் என்­ப­வரின் மனை­வியே சாரா ஜெஸ்மின். “சாரா” இறந்து விட்­டாரா? இல்­லையா? இவர் இந்­தி­யா­வுக்கு தப்பி ஓடிச் சென்று விட்­டாரா? என்­றெல்லாம் நில­விய சந்­தேகம் சமூ­கத்தில் தொடர்ந்தும் அவ்­வாறே இருந்து வரு­கின்­றது.

அம்­பாறை, சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் தாங்கள் வாழ்ந்த வீட்­டி­லேயே இறு­தி­யாக சாரா ஜெஸ்மின் தங்­கி­யி­ருந்­த­தாக மொஹமட் சஹ்­ரானின் மனைவி விசா­ர­ணை­களின் போது தெரி­வித்­தி­ருக்­கிறார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்­பாறை சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் குண்­டு­களை வெடிக்கச் செய்து குண்­டு­தா­ரிகள் பலி­யா­னார்கள். உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம் பெற்று ஐந்து தினங்­க­ளுக்குப் பின்பே இச்­சம்­பவம் நடை­பெற்­றது. அந்த வீட்டில் இரண்டு குண்­டுகள் வெடிக்கச் செய்­யப்­பட்டு அங்­கி­ருந்த 16 பேர் பலி­யா­னமை உறுதி செய்­யப்­பட்­டது. 5 ஆண்­களும், 5 பெண்­களும் 3 ஆண் பிள்­ளை­களும், 3 பெண்­பிள்­ளை­களும் பலி­யா­னார்கள். அவர்­களின் சித­றிய உடற்­பா­கங்கள் அங்­கி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. பலி­யா­ன­வர்­களில் மொஹமட் சஹ்ரான் ஹஷீம் உட்­பட தீவி­ர­வா­தி­க­ளுக்கு நிந்­தவூர் மற்றும் சென்ட்ரல் கேம்ப் வீடு­களில் பொருட்­களை மறைத்து வைப்­ப­தற்கு உத­விய மொஹமட் நியாஸ், சஹ்­ரானின் தந்தை, சஹ்­ரானின் சகோ­த­ரர்­க­ளான மொஹமட் சைனி, மொஹமட் காசிம், மொஹமட் ரில்வான் மற்றும் அவ­ரது மகன் மொஹமட் சஹ்ரான் வசீம், அவ­ரது சகோ­தரி மொஹமட் காசிம் ஹிதாயா (கர்ப்­பிணி பெண்), அவ­ரது தாயார் அப்துல் சகார் சித்தி உம்மா, மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­ல­யத்தில் தற்­கொலை குண்­டு­தாக்­குதல் நடத்தி பலி­யான மொஹமட் நஸார் மொஹமட் அசாத் என்­ப­வரின் மனைவி அப்துல் ரஹீம் பெரோசா ஆகி­யோரின் உடல்கள் அடை­யாளம் காணப்­பட்­ட­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இந்த குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தில் சஹ்­ரானின் மனைவி அப்துல் காதர் பாத்­திமா காதர் என்­ப­வரும் அவரின் மக­ளான மொஹமட் சஹ்ரான் ருதைனா ஆகிய இரு­வ­ருமே உயிர் தப்­பி­யுள்­ளனர். வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்ற வீட்டின் அறை­யொன்­றினுள் இருந்து சாரா ஜெஸ்­மினின் பணப்பை (பர்ஸ்) ஒன்­றினை பொலிஸார் கண்­டெ­டுத்­தனர். என்­றாலும் சாரா ஜெஸ்­மினின் உடற்­பா­கங்­களை பொலி­ஸாரால் அடை­யாளம் காண்­ப­தற்கு முடி­யாமற் போனது. சஹ்­ரானின் மனைவி வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­க­ளின்­படி இறுதி நேரம் வரை சாரா ஜெஸ்மின் அவர்­க­ளுடன் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சாரா ஜெஸ்மின் சாய்ந்­த­ம­ருது வீட்டில் இடம்­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தில் பலி­யா­னமை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் கடந்த 2020 ஜூலை மாதம் 21 ஆம் திகதி சாட்­சி­ய­ம­ளித்­த­போது சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாமன்த விஜே­­சே­கர தெரி­வித்­துள்ளார்.

இறுதிக் கட்­டத்தில் சாரா ஜெஸ்மின் சாய்ந்­த­ம­ருது வீட்டில் இருந்­த­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தின் பின்பு காணப்­பட்ட எந்­த­வொரு சட­லமும் சாரா ஜெஸ்­மினின் தாயா­ரது டி.என்.ஏ. உடன் சம்­பந்­தப்­பட்­ட­தாகக் காணப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாமன்த விஜே­­சே­கர தனது சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சியம் வழங்­கிய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அர்­ஜுன மாஹின்­கந்த வேறு­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களைத் தெரி­வித்­துள்ளார்.

சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்தில் உயிர்­தப்­பிய புலஸ்­தினி மகேந்­திரன் அல்­லது சாரா ஜெஸ்மின் களு­வாஞ்­சிக்­குடி மாங்­காடு பகு­தியில் மறைந்து இருப்­ப­தாக கண்­க­ளினால் கண்­டவர் ஒருவர் கடந்த 2020 ஜூலை மாதம் 6ஆம் திகதி தகவல் ஒன்­றினை வழங்­கினார். அந்தத் தக­வ­லை­ய­டுத்து இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக நான் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்றேன். அங்கு சாரா ஜெஸ்­மினை நேரில் கண்ட நபரைச் சந்­தித்தேன்.

அவர் எனக்கு இவ்­வாறு வாக்­கு­மூலம் வழங்­கினார். 2019 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஒருநாள் அதி­காலை 3.15 மணி­ய­ளவில் நான் மட்­டக்­க­ளப்பு கல்­முனை பிர­தான வீதியில் தேத்­தா­தீவு பிர­தே­சத்தில் பயணம் செய்து கொண்­டி­ருந்­த­போது பிர­தான வீதியை அடை­யக்­கூ­டி­ய­தான குறுக்கு பாதை­யான பீச் வீதி­யி­லி­ருந்து பெண்­ணொ­ரு­வரும் நபர் ஒரு­வரும் பிர­தான வீதிக்குள் நுழை­வதைக் கண்டேன் என்று சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அந்தப் பெண் முகத்தை மறைக்­காத வகையில் கறுப்பு நிற பர்தா அணிந்­தி­ருந்தாள். அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்­தார்கள் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா ஜெஸ்மின் சிறிய வய­தி­லி­ருந்தே தனது வீட்­டுக்கு அருகில் ஓர் வீட்டில் வாழ்ந்­தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் சாரா ஜெஸ்மின் தொடர்­பு­பட்­டவர் என ஊட­கங்கள் பிர­சாரம் செய்­தமை கார­ண­மாக அவரை இலகுவில் நான் அடை­யாளம் கண்டு கொண்டேன் என்றும் அவர் கூறினார்.

இவ்­வாறு பிர­தான வீதிக்கு வந்த அந்தப் பெண் அங்கு வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கறுப்பு நிற பிக்அப் வண்­டியின் பின் ஆச­னத்தில் ஏறு­வதை சாட்­சி­யாளர் கண்­டுள்ளார். வண்­டியில் சார­தியின் ஆச­னத்­துக்கு அடுத்த முன் ஆச­னத்தில் அவ­ருக்கு தெரிந்த நபர் ஒருவர் அமர்ந்­தி­ருப்­ப­தையும் சாட்­சி­யாளர் கண்­டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்­துப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பின்பு கொழும்பு குற்­றத்­த­டுப்­புப்­பி­ரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட அபூ­பக்கர் எனும் அதி­கா­ரி­யாவார். அவ­ரையே சாட்­சி­யாளர் கண்­டுள்ளார். சாட்­சி­யாளர் பொலிஸ் அதி­கா­ரி­யுடன் கதைப்­ப­தற்கு தயா­ரா­ன­போது அந்த பிக்அப் வண்டி மட்­டக்­க­ளப்பு பகு­தியை நோக்கி வேக­மாகச் சென்று கொண்­டி­ருந்­தது.

சாரா ஜெஸ்மின் பட­கொன்றின் மூலம் இந்­தி­யா­வுக்கு தப்­பித்துச் செல்­வ­தற்கு சாராவின் தாயி­னது உறவினர் ஒருவரே உதவி செய்­துள்ளார். மேலும் அவ­ளது சகோ­த­ரரும் உதவி செய்­துள்ளார் என்­பதை விசா­ர­ணை­களை மேற்­கொண்ட அதி­கா­ரிகள் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளார்கள் என ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றென்றால் சாரா ஜெஸ்மின் இப்­போது எங்கே இருக்­கிறார்.?
தற்­போது சாரா ஜெஸ்­மினின் புதிய கதை­யொன்றை அண்­மையில் கொழும்பு பிர­தான மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து கேட்க முடிந்­தது.

அது, சாரா ஜெஸ்­மினின் கீழ் ஆயு­தப்­ப­யிற்சி மற்றும் அடிப்­ப­டை­வாத போத­னை­களில் கலந்து கொண்ட பெண்கள் பற்­றி­ய­தாகும்.

இஸ்­லா­மிய அர­சொன்­றினை நிறு­வு­வ­தற்­காக சத்­தி­யப்­பி­ர­மாணம் (பைஅத்) செய்து கொண்­ட­தாக கூறப்­படும் 10 பெண்கள் சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை கிடைக்கும் வரை அவர்­களை விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லையில் வைக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

சாரா ஜெஸ்­மினின் தலை­மையில் 16 பெண்கள் இஸ்­லா­மிய அர­சொன்­றினை நிறு­வு­வ­தற்­காக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்­டுள்­ளனர். இவர்­களில் 6 பேர் சாய்ந்­த­ம­ருது பிர­தேசம் மற்றும் தெமட்­ட­கொட மஹ­வில கார்டன் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்­களில் பலி­யா­கி­யுள்­ளார்கள் என்று பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவினால் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

குறிப்­பிட்ட 16 பெண்­க­ளுடன் 9 ஆண்­களும், இந்த சத்­தி­யப்­பி­ர­மாணம் (பைஅத்) நிகழ்வில் பங்­கு­கொண்­டி­ருந்­துள்­ளனர். இந்த வகையில் மொத்தம் 25 பேர் இஸ்­லா­மிய அர­சாங்கம் (ஆட்சி)யொன்­றினை நிறு­வு­வ­தற்­காக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்­டுள்­ளனர் எனவும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு நீதி­மன்­றுக்குத் தெரி­வித்­துள்­ளது. இவ்­வி­வ­கா­ரத்தில் ஆண்­களை விட பெண்­களே அதிக ஆர்வம் கொண்­டி­ருந்­துள்­ளமை இதி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தேக நபர்­க­ளான 10 பெண்கள் தொடர்பில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு பல தக­வல்­களை நீதி­மன்­றின்முன் வைத்­தது. இந்­தப்­பெண்கள் சாரா ஜெஸ்­மினின் கீழ் ஆயு­தப்­ப­யிற்சி பெற்று உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடாத்த திட்­ட­மிட்­டி­ருந்­தனர். அதற்­காக முகா­மிட்டு அடிப்­ப­டை­வாத போத­னை­களில் கலந்து கொண்­டுள்­ளார்கள். அத்­தோடு அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்­கை­க­ளுக்கு உட்­பட்டு ஆயு­தப்­ப­யிற்­சிகள் கூட பெற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் எனும் விப­ரங்கள் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த 10 பெண்கள் உட்­பட மொத்தம் 25 பேரும் அம்­பாந்­தோட்டை, நுவ­ரெ­லியா பிளக்பூல், காத்­தான்­குடி, பன்டா மல்டி ஸ்போர்ட்ஸ், கர்­பலா நகர், லேவெல்ல, யடி­ஹேன மல்­வான, செட்­டிக்­குளம், தல்­கஸ்­வெவ, ரம்­பேவ, மத­வாச்சி ஆகிய பகு­தி­களில் நடாத்­தப்­பட்ட ஆயு­தப்­ப­யிற்சி முகாம்­களில் பயிற்­சிகள் பெற்­றுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட இந்த 10 பெண் சந்­தேக நபர்கள் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்தே இவ்விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்த அனைத்து விபரங்களும் பொலிஸ் விசாரணைகளையடுத்தே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அப்படியென்றால் இந்தப் பெண்கள் இஸ்லாமிய ஆட்சியொன்றை தேடிச் செல்வதற்கு அல்லது நிறுவிக் கொள்வதற்கு முயற்சித்தார்களா? தமது பிள்ளைகளை விட இஸ்லாமிய ஆட்சி மேலானதா?

தங்கள் பிள்ளைகளைக்கூட பலி கொடுத்து இஸ்லாமிய ஆட்சியை தேடிச் செல்லும் வகையில் அவர்களது மூளைகளை சலவை செய்தவர்கள் இன்று எங்கே?
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரியின் சாட்சியத்தை நாம் மீட்டுப்பார்க்க வேண்டும்.

‘தெமட்டகொட மஹவில கார்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தை கண்காணிக்கச் சென்ற சொகோ பொலிஸ் பிரிவின் அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆரச்சி தனது சாட்சியத்தில் இவ்வாறு கூறுகிறார்.

“தற்கொலை குண்டுதாரியான பெண் நிலத்தில் குண்டினை வைத்து பிள்ளைகளை தன்னுடன் அணைத்துக்கொண்டு நிலத்தின்மீது படுத்துக்கொண்டு அதனை வெடிக்கச் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

அப்படியானால் அந்தத் தாய் தனது கர்ப்பப் பையிலிருந்த குழந்தை மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இறுதியாக எங்கு பயணமானார்?

சிங்களத்தில்: நிமந்தி ரணசிங்க
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
நன்றி : ஞாயிறு லங்காதீப.

விடிவெள்ளி பத்திரிகை 24/2/2022