பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்

எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வது சவாலாக உள்ளது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

இந்த நிலைமையை அடுத்து பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் “சூன் பாண்”  தொழிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.