கலகெதர முதல் ரம்புக்கனை, நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் பாரிய மோசடி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் ரம்புக்கனை வரையிலான 20 கிலோ மீற்றர் தூரத்துக்கான நிர்மாணப் பணிகளுக்காக 16,440  கோடி ரூபா  பண மோசடி செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

இந்த 20 கிலோ மீற்றர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அது ஹம்பாந்தோட்டை முறைமுகம் மற்றம் தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான செலவான செலவிட்ட தொகைக்கு சமமாகும் என  ‘ஊழலுக்கு எதிரான குரல்’  அமைப்பின்   ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

தெஹிளையில் உள்ள தேசிய தொழிற்சங்க சம்மேளன மத்திய நிலையத்தில் அண்மையில்  நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்மாதம் 27 ஆம் திகதியன்று மத்திய வங்கி ஊழல் மோசடி இடம்பெற்று 7 ஆண்டுகளாகவுள்ளன. 

இந்த மோசடியை விடவும் 10 மடங்கு அதிகமானதாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் ரம்புக்கனை வரையிலான 20 கிலோ மீற்றர் தூரத்துக்கான நிர்மாண வேலைத்திட்டத்தின்போது இடம்பெறவுள்ளது. 

சீன நிறுவனமொன்றும் இலங்கையின் தரகு நிறுவனங்கள் சில ஒன்றிணைந்து உரூவாக்கப்பட்ட நிறுவனமொன்றும் குறித்த டெண்டருக்கான  ஏல விலையை முன்வைத்திருந்தது.  

குறித்த இரண்டு நிறுவனங்களது டெண்டர் விபரங்களை ஆராய்ந்துன் பின்னர், சீன நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நிறுவனமானது கட்டுமானத் துறையில் நீண்டகால அனுபவத்தை கொண்டிருப்பதுடன், இலங்கை நிறுவனத்தை விடவும் குறைந்தளவான தொகையை ஏலத் தொகையாக குறிப்பிட்டுள்ளது.

நீக்கப்பட்ட குறித்த சீன நிறுவனமானது, 20 கிலோ மீற்றர் நிர்மாணப் பணிகளுக்கான ஏலத் தொகையாக 1050  மில்லியன் மெரிக்க டொலர்கள் நிர்ணயித்துள்ளதுபோதிலும், இலங்கை நிறுவனமானது, 1872 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏலத் தொகையாக  நிர்ணயித்துள்ளது. இதன்படி சீன நிறுவனத்தை விடவும் 822 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

இலங்கை மதிப்பில் 16440 கோடி  ரூபா மதிப்பாகும். அதாவது, 164 பில்லியன் ரூபாவாகும். ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்கு செலவான தொகை 145 பில்லியன் ரூபாவாகும்.

அமைச்சரவைப் பத்திரங்களை ஆராய்ந்து பார்த்தன் மூலம் இலங்கை நிறுவனத்திற்கு அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக ‍நெடுஞ்சாலைகள் அமைச்சானது அமைச்சரவைவை தவறாக வழிநடத்தியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பத்திரங்களில் 82 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த 20 கிலோ மீற்றர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அது ஹம்பாந்தோட்டை முறைமுகம் மற்றம் தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான செலவான செலவிட்ட தொகைக்கு சமமாகும்”  என்றார்.

இந்த ஊழல் மோசடி பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு பெற்றுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் இந்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கபவும், இவ்விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

(எம்.எம்.சில்வெஸ்டர்)வீரகேசரி– (2022-02-22)