மாடறுத்தல் தகாத செயல் என்றால் அனைத்து மிருக வதையும் தகாத செயலே.

மாடு அறுத்தல் பிரேரனை தொடர்பாக அவர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மாடறுத்தல் தொடர்பாக பிரேரணை ஒன்றினை முன்வைக்க உத்தேசித்துள்ள பிரதமர் காரணங்கள் என்னவென்று கூட சொல்லாமல்  இந்த பிரேரணை முன்வைக்க முற்படுகின்றார். மாடு அறுத்தல் சுகாதார அல்லது நம்பிக்கை ரீதியான பிரச்சினையாக இருந்தால் ஆடு, கோழி போன்றவற்றையும் அறுக்கக்கூடாது. ஆனால், மாட்டை மட்டும் அறுக்கக்கூடாது என்பது தர்க்கமான விடயமாகும்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பிரதான ஜீவனோபாயம் மாடு வளர்க்கும் தொழிலாகும். ஆனால் இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் மாடுகள் இறக்கும் வரை விவசாயிகளுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதுவரை அவர்களால் பொருளாதார சுமைகளை தாங்க முடியாது.

அதுமட்டுமல்லாது பல்கிப் பெருகும் மாடுகளால் விவசாய பயிர்நிலங்கள் நாசமாகும். எனவே வெட்டுக்கிளி போன்ற பல பிரச்சினைகளினால் வாடும் விவசாயிகள் இனிவரும் காலங்களில் மாடுகளின் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும்.
அதுமட்டுமில்லாது மண்திருட்டு போதைப்பொருள் கடத்தல்களை போன்று, எதிர்காலத்தில் மாடு அறுத்தலும் மிகப்பெரிய குற்றச் செயலாக உருவெடுத்து அரசாங்கத்துக்கே தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். அத்தோடு அதிகரிக்கும் மாடுகளினால் அடிக்கடி வீதி விபத்துக்கள் நிகழுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே இந்த விடயத்தை பிரதமர் வெறும் யோசனையாகவே முன் வைத்துள்ளார். இதற்காக யாரும் தேவையற்ற விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆகவே இந்த மாடறுத்தல் தடை என்ற விடயம் வெறுமனவே ஒரு நம்பிக்கை அடிப்படையில் வந்தால் அது ஒரு இஸ்லாமிய இனத்தின் உணவு முறையிலும் கைவைத்து சீண்டுகின்ற செயலாக மாத்திரம் அமையும். ஆகவே மாடறுத்தல் தடை என்ற விடயத்தில் சற்று நிதானத்துடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

Read:  மீண்டும் ரணில் !!

தொடர்ச்சியாக சிறுபான்மை சமுகத்தின் கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளில் தாகத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்தால் அதற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போரிடுவோம் என்று கலாநிதி ஜனகன் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.