இலங்கை வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

இலங்கையில் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்காகப் பிரதமரைப் பாராட்டுவதாக
இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, சிவசேனையின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரப் போகிறார்.

இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசுவதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கி றார்கள். இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

பசுவ தைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக் கைகளைக் கண்காணித்து மதமாற்றத் தைக் குறைக்கவும் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச முயற்சிப்பார் என தெரி விக்கப்பட்டுள்ளது.

Previous article“ஜம்மியதுல் உலமா மீதோ, உலமாக்கள் மீதோ கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது”
Next articleகழுவி, உலர வைத்து கொழும்பில் விற்கப்படும் ‘மாஸ்க்’