அலுவலக நேரத்தில் திருத்தம்

அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை (21) இடம்பெறவுள்ள தேசிய தொழில் ஆலோசனை சபையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளாா்.

வாகன நெரிசலை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையாக அலுவலக நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளா்ா.

தேசிய தொழில் ஆலோசனை சபை நாளை தொழில் அமைச்சில் ஒன்றுக்கூடவுள்ளது. இதன்போது ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அந்த நிதியத்தினூடாக 30 சதவீதத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இலகுப்படுத்துவதற்காக முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோன்று, நிதி சேவையின் அடிப்படையில் வரி அறவீடுதல் மற்றும் மேலதிக வரி தொடர்பில் இதன்போது தொழிற்சங்கங்களினால் கலந்துரையாடப்படவுள்ளது.

-தமிழன்.lk– (2022-02-21 09:07:28)

Read:  மீண்டும் ரணில் !!