நாளை(06) அஞ்சல் அலுவலகங்கள் மூடப்படும். தொழிற்சங்க நடவடிக்கை முடிவு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும்  நாளை(06) மூடப்படுமென, அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் 07ஆம் திகதி  நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்களின் முன்னணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
SOURCETamil-Mirror