திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.

திருமண நிகழ்வுகள் தொடர்பில் நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இரண்டில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் திருமண நிகழ்வுகளின் போது,  பொது சுகாதார பரிசோதகர்கள் அவதான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகள் தொடர்பிலான  நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை அவதானிப்பதற்கே பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடவுள்ளதாக  சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரினதும் பெயர், முகவரி அடங்கிய தரவுத் தாளை பொது சுகாதார பரிசோதகரிடம் வழங்கி, அதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வது அவசியம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page