கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தற்போதைய நிலவரத்தின் படி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,155 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் நாட்டில் புதியதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 பேர் மாலைதீவில் இருந்து நாட்டிற்கு வந்தவர்களும், குவைட், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 188 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 70 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு, கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமாகியவர்களின் எண்ணிக்கை 2,955 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவீரகேசரி பத்திரிகை