இஸ்திஹார் Imadudeen – உடல் தகனம் விவகாரம்; முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்?

உயிர்களை அடக்கம்‌ செய்யலாம்‌ என்பதற்கான அங்கீகாரம்‌ வழங்கியிருந்த போதிலும்‌ இன்று இலங்கையில்‌ இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களைப்‌ பொறுத்தவரைமிலும்‌ இதுவொரு துரதிர்ஷ்டமான செய்தியாகும்‌.

அந்த வகையில்‌ அரசாங்கம்‌ ஒரு கீர்மானத்தை எடுத்து செயற்படும்‌ போது இதனை எமது முஸ்லிம்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ அரசியல்‌ ரீதியாக காய்கள்‌ நகர்க்கி செயற்பட முனைந்தமையால்‌ எமது விரலை நாங்களே எரித்துக்‌ கொண்ட மாதிரியான விடயம்‌ என்றே கூறவேண்டும்‌. இது தொடர்பில்‌ சம்மந்தப்பட்ட அரசியல்‌ உயர்‌ பீடங்களுடன்‌ கதைப்பதற்கு முன்னர்‌ மக்களை உணர்ச்சியூட்டகூடிய செய்திகளை மக்களுக்கு வழங்கி அரசியல்‌ இலாபம்‌ தேடும்‌ முயற்சிகளிலேயே அவர்கள்‌ ஈடுபட்டார்கள்‌. இன்று இது முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ ஒரு பூதாகரமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வை எட்ட முடியாமல்‌ ஏக்கத்துடன்‌ அங்கலாய்த்துப்‌ போய்‌ இருக்கின்றனர்‌ என்று அக்குறணை பிரதேச சபையின்‌ தவிசாளர்‌ இஸ்திஹார்‌ இமாதுதீன்‌ தினக்குரல்‌ பத்திரிகைக்கு தெரிவித்தார்‌.

ஆளும்‌ தரப்பை பிரதிநிதித்துவப்‌படுத்தும் அக்குறணை பிரதேச சபையின்‌ தவிசாளர் என்ற வகையில்‌ கொரோனா தோற்றில்‌ முஸ்லிம்களுடைய தகனம் குறிதது உங்கள் கருத்து என்ன?

கொரோன தோற்றுத்‌ தொடர்பில்‌ முஸ்லிம்களது மரணித்த உடலை தகனம்‌ செய்யும்‌ விவகாரத்தில்‌ முஸ்லிம்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ அதைவைத்து அரசியல்‌ இலாபம்‌ தேடும்‌ முயற்சிகளிலே ஈடுபட்டுள்ளார்களே தவிர அவர்கள்‌ அதற்கான தீர்வைக்‌ காண முனையவில்லை. உயிர்களை அடக்கம்‌ செய்யலாம்‌ என்பதற்கான அங்கீகாரம்‌ வழங்கியிருந்த போதிலும்‌ இங்கு இலங்கையில்‌ இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களைப்‌ பொறுத்தவரையிலும்‌ இதுவொரு துரதிர்ஷ்டமான செய்தியாகும்‌. அந்த வகையில்‌ அரசாங்கம்‌ ஒரு தீர்மானத்தை எடுத்து செயற்படும்‌ போது இதனை எமது முஸ்லிம்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ அரசியல்‌ ரீதியாக காய்கள்‌ நகர்த்தி செயற்பட முனைந்ததால்‌ எமது விரலை நாங்களே எரித்துக்‌ கொண்ட மாதரியான விடயம்‌ என்றே கூற வேண்டும்‌. இது தொடர்பில்‌ சம்மந்தப்பட்ட அரசியல்‌ உயர்‌ பீடங்களுடன்‌ கதைப்பதற்கு முன்னர்‌ மக்களை உணர்ச்சிஷட்டக்‌ கூடிய செய்திகளை மக்களுக்கு வழங்கி அரசியல்‌ இலாபம்‌ தேடும்‌ முயற்சிகளிலேயே அவர்கள்‌ ஈடுபட்டார்கள்‌. இன்று இது முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ ஒரு பூதாகரமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வை எட்ட முடியாமல்‌ ஏக்கத்துடன்‌ அங்கலாய்த்துப்‌ போய்‌ இருக்கின்றனர்‌.

பிரதமர்‌ சமீபத்தில்‌ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்‌ அழைத்திருந்தார்‌. அதற்கு சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பினர்‌ சென்று இருந்தார்கள்‌. எமது முஸ்லிம்‌ அரசியல்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ செல்லவில்லை. இது தொடர்பில்‌ நீங்கள்‌ என்ன கூற விகும்புகின்றீர்கள்‌?

உண்மையிலேயே பிரதமர்‌ தலைமையில்‌ எமது நாட்டின்‌ எதிர்கால நலனைக்‌ கருத்திற்‌ கொண்டு ஓர்‌ ஆக்கபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரதமர்‌ கடந்த பாராளுமன்றத்தில்‌ அங்கம்‌வகித்த அத்தனை பாராளுமன்ற உறுப்ரினர்களையும்‌ அழைத்திருந்தார்‌. அந்நேரத்தில்‌ அரசாங்கத்திற்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌. அதே போன்று வடக்கு கிழக்கைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தக்‌ கூடிய தமிழ்‌ தேசிய கூட்டமைப்பின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டனர்‌. எனினும்‌ முஸ்லிம்‌ கட்சிகளைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தும்‌ முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ இக்‌ கூட்‌டத்திற்குச்‌ செல்லாமல்‌ பகிஸ்கரித்தனர்‌. அவர்கள்‌ இக்‌ கூட்டத்திற்குச்‌ செல்லாமல்‌ பின்‌ வாங்கியமை என்பது உண்மையிலே எமது முஸ்லிம்‌ சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்‌.

அன்று தமிழ்‌ தேசிய கூட்டமைப்பினர்கள்‌ அக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்டு பிரதமருடன்‌ பேசி பல வெற்றிகளையும்‌ கண்டு இருக்கிறார்கள்‌. ஆகவே அன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்காக ஒன்று சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ இன்று முஸ்லிம்‌ மரணம்‌ தகனம்‌ செய்யும்‌ விடயத்தில்‌ ஒன்று சேராமல்‌ ஏன்‌ பின்வாங்கினார்கள்‌ என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாகும்‌. அடுத்து வரப்போகும்‌ பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ ஆட்சியிலுள்ளவர்கள்‌ இதை வைத்து தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்‌ கொள்ள எடுக்கும்‌ முயற்சியைப்‌ போன்று எமது முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ இந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வு காண முற்படாமல்‌ இந்தப்‌ பிரச்சினையை வைத்து அரசியல்‌ செய்யக்‌ கூடிய ஒரு சூழ்நிலையை அதானிக்க முடிகின்றது. எனவே எமது முஸ்லிம்‌ சமூகத்துவம்‌ சமூகம்‌ சமூகம்‌ என்று பேசினாலும்‌ அவர்களுடைய அரசியல்‌ காய்‌ நகர்த்தலிலும்‌ வாக்கு வங்கியை தக்க வைத்துக்‌ கொள்வதற்கான போக்கையே அவர்களும்‌ கடைப்பிடிக்கின்‌றனர்‌. இந்த நிலைமைகள்‌ மாற வேண்டும்‌.

எதிர்காலத்தில்‌ நல்ல முஸ்லிம்‌ தலைமைத்‌துவங்களை இனங்கண்டு உருவாக்க வேண்டும்‌. அவ்வாறு இல்லையெனில்‌ எதிர்காலத்தில்‌ முஸ்லிம்கள்‌ இன்னும்‌ பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்‌ கொடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்‌ என்பதுதான்‌ தன்னுடைய கருத்தாகும்‌.

நீங்கள்‌ பொதுத்‌ தேர்தலில்‌ சுயெச்சை வேட்பாளராக கண்டி மாவட்டத்தில்‌ களமிறங்குவதற்கான முக்கிய காரணம்‌ என்ன?

2010 ஆம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில்‌ கண்டி மாவட்டத்தில்‌ மூன்று முஸ்லிம்‌ பாராளுமன்றப்‌ பிரதிநிதித்துவங்கள்‌ காணப்பட்டன. இம்‌மாவட்டத்தில்‌ சுமார்‌ 170000 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌. இந்த வாக்காளர்‌ தொகைக்கு ஏற்ப மூன்று முஸ்லிம்‌ பாராளுமன்றப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. இருப்பினும்‌ தற்போது பொதுத்‌ தேர்தலுக்காக திட்டமிட்ட அடிப்படையில்‌ தேசிய கட்சிகளில்‌ வழக்கமாக இரு உறுப்பினர்‌ அல்லது ஒரு உறுப்பினர்கள்‌ மட்டுமே வேட்பாளராக களமிறக்கும்‌ நிலையில்‌ உள்ளனர்‌. கடந்த காலங்களில்‌ இரு பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ மட்டுமே பெற்றுக்‌ கொள்ளக்‌ கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளன. இத்தகைய நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்‌. தற்போது இரண்டாக இருப்பதை மூன்றாக மாற்றியமைக்க வேண்டும்‌ என்ற முயற்சியிலேயே நாங்கள்‌ இம்முறை சுயெச்சை அணியாக நின்று பிரதிநிதித்துவம்‌ ஓன்றை பெற்றுக்‌ கொள்ளத்‌ தீர்மானித்துள்ளோம்‌.

நாங்கள்‌ கடந்த ஒன்றரை வருடமாக இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்‌. இக்கால கட்டத்தில்‌ ஐக்கிய தேசிய கட்சி இரு பிரிவுகளாக நிற்கின்றனர்‌. இது எங்களைப்‌ பொறுத்தவரையில் நல்லதொரு சந்தர்ப்பமாகும்‌. இம்மாவட்டத்தில்‌ இழந்த முஸ்லிம்‌
பாராளுமன்றப்‌ பிரதிநிதித்துவங்களைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்‌ இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே நான்‌ சுயெட்ச்சை அணியின்‌ முதன்மை வேட்பாளராகக்‌ களமிறங்கியுள்ளேன்‌.

நீங்கள்‌ அக்குறணைப்‌ பிரதேச சபையில்‌ ஸ்ரீலங்கா பொதுஜனப்‌ பெரமுனவின்‌ ஆதரவு அணியைக்‌ கொண்ட தவிசாளர்‌ என்ற வகையில்‌ இத்தேர்தலில்‌ மக்கள்‌ மத்தியில்‌ எக்‌ கட்சி சார்பான பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்‌ என்று கூறுவீர்‌களா?

நாங்கள்‌ வந்து அரசியல்‌ ரீதியாக எல்லாக்‌ கட்சிகளுடனும்‌ தொடர்புகளை வைத்துக்‌ கொண்டு இருக்கின்றோம்‌. அந்த வகையில்‌ உள்ளுர்‌ அரசியலை மைமமாகக்‌ கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜனப்‌ பெரமுன மற்றும்‌ ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சி உறுப்பிவர்களுடைய ஆதரவுடன்‌ அக்குறணை பிரதேச சபையின்‌ தவிசாளராக கடமையாற்றுகின்றேன்‌. அதே போன்று இடம்பெறும்‌ பொதுத்‌ தேர்தலில்‌ எந்தக்‌ கட்சி ஆட்சி அமைக்கின்றதோ அக்கட்சியுடன்‌ இணைந்து அரசியல்‌ ரீதியிலான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம்‌. நாங்கள்‌ வெற்றி பெறும்‌ பட்சத்தில்‌ ஆளும்‌ கட்சியாக இருந்தாலும்‌ சரி! அல்லது எதிர்‌ கட்சியாக இருந்தாலும்‌ சரி வெற்றி பெறும்‌ எந்தக்‌ கட்சியுடனும்‌ நாங்கள்‌ ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்‌.

நாங்கள்‌ குறிப்பாக பிரதேச சபையில்‌ உள்ளூர்‌ பிரதேசத்தின்‌ அரிவிருத்தி நலனைக்‌ கருத்திற்‌ கொண்டு ஸ்ரீலங்கா மொதுஜனப்‌ பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சி ஆதரவுடன்‌ ஆட்சி அமைத்திருக்கின்றோம்‌. ஆனால்‌ அதற்கப்பால்‌ மாவட்ட மட்டத்தைப்‌ பொறுத்த வரையிலும்‌ அந்த கட்சிகளுடன்‌
சேர்ந்து தான்‌ போக வேண்டும்‌ என்பது அவசியம்‌ கிடையாது.

கொரோனா தொற்றுத்‌ தொடர்பில்‌ உங்கள்‌ அபிப்பிராயம்‌ என்ன?

உண்மையிலே கொரோணா தொற்றைக்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டு வருவதற்காக அரசாங்கம்‌ எடுத்த வேலைத்‌ திட்டம்‌ வரவேற்கத்தக்கதாகும்‌. இதில்‌ அரசியலை சம்மந்தப்படுத்தப்படாமல்‌ அரச அதிகாரிகளைப்‌ பயன்படுத்தி ஊரடங்கு வேளையில்‌ முடக்கப்பட்ட மக்களுக்குத்‌ தேவையான நிவாரண உதவிகளைப்‌ பெற்றுக்‌ கொடுப்பதில்‌ அரசாங்கம்‌ எடுத்த நடவடிக்கைகளைப்‌ பாராட்ட வேண்டும்‌. விசேட ரூபா 5000 கொடுப்பனவு மக்கள்‌ மத்தியில்‌ பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது.

ஏனைய நாடுகளை விட இலங்கை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும்‌ விடயத்தில்‌ திருப்திகரமான முறையில்‌ செயற்படுவதாக நாங்கள்‌ அறிகின்றோம்‌. அதன்‌ அடிப்படையில்‌ எமது நாட்டு ஜணாதிபதி, பிரதமர்‌, சுகாதாரத்‌ துறையினர்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters