VIDEO- இரசியமாக மொபைலில் வீடியோ செய்த விவகாரம். சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல் துறை பிரிவின் சாட்சிய பதிவுகளின் போது இரசியமான முறையில் சாட்சிய விசாரணைகளை கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்த மௌலவி மற்றும் சட்டத்தரணி ஆகியோருக்கு சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அதிகாரிகள் மௌலவியின் செயல் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு ” உங்களின் தேவைக்கு ஏற்பட செயற்பட வேண்டாம். நேற்று வருகை தந்தீர்கள் நேற்றும் கையடக்க தொலைபேசியை எடுத்து சென்றீர்களா? உண்மையை கூறுங்கள் இல்லையென்றால்….. நீங்கள் சட்டத்தரணிவழியாக கையடக்க தொலைபேசியை அனுப்பியது மாத்திரமின்றி … சாட்சிய விசாரணைகளை பதிவும் செய்து… தற்பொழுது இல்லை என்கிறீர்கள்..ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. ஒரு நாளும் எவரும் இவ்வாறான செயலை புரிந்ததில்லை. எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த மௌலவியின் கையடக்க தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter