2021 – முதலாம் தரம்- சேர்ப்பதற்கான விண்ணப்பம் & அறிவுறுத்தல்

2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் குறித்த அறிவிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்க்கும் பெற்றோர் சட்டரீதியான பாதுகாவலர்கள் இவ்வறிவித்தலில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவும் வழங்கப்பட்டுள்ள மாதிரிக்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமக்குப் பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களுக்கு 2020 ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

அனைத்து தகுதிகளும் பூர்த்தியாக்கப்படவேண்டியது 2020 ஜூன் 30 திகதிக்கு செல்லுபடி ஆகுமாறு இருப்பதோடு அனைத்து எழுத்து ஆவணங்களும் அத்தினத்துக்கு இணங்க சமர்ப்பிக்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் கீழே பிரசுரிக்கப்படும் மாதிரிக்கு ஏற்ப தயார் செய்யப்படுதல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் இணைப்பு.. இங்கே கிளிக் செய்யவும்

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு
SOURCEஹிரு-செய்திகள்