மு.கா. Mp க்கள் சிலர், அரசாங்கத்தில் இணைய உள்ளார்களா..?

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கலந்துரையாடல் ஏற்கனெவே நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

அதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் அவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!
SOURCEதினக்குரல் பத்திரிகை