ஞானசார தேரரின் சாட்சியத்தை இரகசியமாக வீடியோ செய்ததால் சர்ச்சை !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலங்கள் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ஞானசார தேரர் மற்றும் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் உட்பட மேலும் சிலர் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில், ஞானசார தேரரின் வாக்குமூலத்தை இரகசியமாக தனது சட்டத்தரணி மூலம் உள்ளே எடுத்துவந்த கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்ததை அடுத்து சந்தேகத்திற்கிடமான செயலின் காரணமாக குறித்த மௌலவியை சோதனைக்குட்படுத்திய போது இரகசியமாக பதிவு செய்தது தெரியவந்தது.

பின்னர் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணியிடமிருந்து அறிக்கைகளைப் பெற பொலிஸ் விசாரணை பிரிவுக்கு ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா
VIAமடவளநியூஸ்