அரசை வீழ்த்தும் சூழ்ச்சிக்கு இடமளிக்க தயாரில்லை

– டயானா கமகே எம்.பி சூளுரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

கம்பளை பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா மகளிர் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து அரசியல் மட்டத்தில் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நான் வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை கூட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. அவர் எவ்வாறு நாட்டை பாதுகாப்பார்.

முட்டாள் தனமான யோசனைகளினால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது ஐந்தாக பிளவடைந்துள்ளது .கட்சியின் பெயரில் மாத்திரமே ஐக்கியம் (சமகி) உள்ளது. உண்மையில் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.கட்சியை சீர்செய்ய எதிர்க்கட்சி தலைவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

மின்விநியோக துண்டிப்பு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினகரன் – (2022-02-07 08:06:23)

Read:  மீண்டும் ரணில் !!