வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 90 பேரும் டுபாயில் இருந்து இலங்கை வந்த 18 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 41 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 40 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மற்றைய நபர் டுபாயில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?