இஸ்லாம் பாடப் புத்தகங்களை மீளப் பெறுவதன் சூட்சுமம்?

பாடசாலை மாணவர்களுக்கு இவ்‌ வாண்டு வழங்கப்பட்ட இஸ்லாம்‌ பாடப்‌ புத்தகங்களை மீளப்‌ பெறுமாறு அல்லது அவற்றை வழங்கும்‌ நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மேலிடத்தில்‌ இருந்து பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்‌ளமை, ஒட்டுமொத்த சமூகத்திடையேயும்‌ ஒருவித மனக்‌ கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரம்‌ 6,7 மற்றும்‌ 10 மாணவர்களுக்கான சிங்கள மொழிமூல இஸ்லாம்‌ பாடநூல்கள்‌, தரம்‌ 6, 10 மற்றும்‌ 11 தர மாணவர்களுக்‌கான தமிழ்‌ மொழி மூலமான இஸ்லாம்‌ பாட நூல்கள்‌ ஆகியவற்றை மீளப்‌ பெறுமாறே கல்வி வெளியீட்டுத்‌ திணைக்களம்‌ அறிவித்‌ துள்ளது. இப்புத்தகங்களில்‌ அடையாளம்‌ காணப்பட்டுள்ள சில தவறுகளைத்‌ திருத்துவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத்‌ தகவல்கள்‌ வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட சில இஸ்லாம்‌ பாடப்‌ புத்தகங்‌களை மீளப்பெறுமாறு கல்வி வெளிமீட்டுத்‌ திணைக்களம்‌ உத்தியோகபூர்வமாக அறிவித்‌துள்ளமை பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஒரு பன்மைத்துவ சமூகங்கள்‌ வாழும்‌ நாடு என்ற வகையிலும்‌, சமய விடயங்களை மிகச்‌ சரியாக பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்‌ என்ற அடிப்படையிலும்‌ காலத்‌திற்கு ஏற்ப சிறுசிறு சரிபார்ப்புகள்‌ மேற்‌ கொள்ளப்படுவது நல்ல விடயமே.

அதுமட்டுமன்றி, பாடப்புத்தகங்கள்‌ காலத்‌திற்கு காலம்‌ திருத்தப்படுவதும்‌, அதிலுள்ள விடயங்கள்‌ புதுப்பிக்கப்பட்டு புதிய பதிப்‌புக்கள்‌ வெளியிடப்படுவதும்‌ வழக்கமான நடைமுறை தான்‌.

அந்த வகையில்‌ இதில்‌ குறை காண்பதற்கு எதுவும்‌ இல்லை. ஆனால்‌, வெளிப்படையாக அப்பணி மேற்கொள்ளப்படுவதுடன்‌ முஸ்லிம்‌ சமூகத்திற்கு அதுபற்றி தெளிவுபடுத்துவது தார்மீகமானது.

ஏனெனில்‌ அதுதான்‌ எல்லா சமயங்களுக்கும்‌ அதுசார்‌ கல்விக்கும்‌ இருக்கின்ற சிறப்புத்‌ தன்மையாகும்‌. கணிதம்‌, விஞ்‌ஞானம்‌, பொருளியல்‌, மனையியல்‌ போன்ற ஏனைய பாடப்‌ புத்தகங்களின்‌ கோட்பாடுகள்‌, காலத்திற்கேற்ற வரைவிலக்கணங்கள்‌ மாறுவது போல, எந்தவொரு சமயத்தின்‌ அடிப்படை அம்சங்களும்‌ மாற்றியமைக்கப்படுவதில்லை.

இதில்‌, அரசியல்வாதிகள்‌ அல்லது ஏனைய மத அமைப்புக்கள்‌ மற்றும்‌ இன சகிப்புத்‌ தன்மை அற்றவர்களின்‌ நிலைப்பாடுகள்‌ எந்தவொரு தாக்கத்தையும்‌ செலுத்த முடியாது. இலங்கை வரலாற்றில்‌ முஸ்லிம்களும்‌ தமிழர்களும்‌ இந்த நாட்டுக்குச்‌ செய்த அர்ப்‌பணிப்புகளை வரலாற்றில்‌ திரிபுபடுத்தியது போல, பெளத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம்‌ மார்க்க அடிப்படைகளை யாரும்‌ ‘தமக்கு விரும்பிய கோப்பைகளில்‌’ ஊற்றிக்‌ கொடுக்க முடியாது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

யதார்த்தம்‌ இவ்வாறிருக்க, நீண்ட காலம்‌ மூடப்பட்டிருந்த பாடசாலைகள்‌ மீளத்‌ திறக்‌கப்பட்டு, பாடப்‌ புத்தகங்கள்‌ பெருமளவுக்கு விநியோகிக்கப்பட்ட பிறகு திடுதிடுப்‌பென தவறுகளை கண்டுபிடித்தது போல, குறிப்பிட்ட பாடப்‌ புத்தகங்களை மீளப்‌ பெறுமாறு கூறப்பட்டுள்ளமை, ‘இதற்குப்‌ பின்னால்‌ ஏதோ சூட்சுமம்‌ இருக்கின்றதோ’ என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியி ருக்கின்றது.

ஏனெனில்‌, அடிப்படைவாதத்தை ஒழித்தல்‌ என்ற பெயரிலும்‌ முஸ்லிம்‌ தனியார்‌ சட்‌டத்தை மறுசீரமைத்தல்‌ என்ற பெயரிலும்‌ வெளித்‌தரப்பினரும்‌ சில புல்லுருவிகளும்‌ தேவையற்ற விடயங்களுக்குள்‌ மூக்கை நுழைத்து, புகுந்து விளையாடுவது நாடறிந்த இரகசியமே.

ஒரு பாடப்‌ புத்தகத்தில்‌ தவறான உள்ளடக்‌கங்கள்‌ இருந்தால்‌ பொதுவாக அந்த பாடப்‌ புத்தகங்கள்‌ அடுத்த கல்வியாண்டுக்கு வழங்‌கப்படும்‌ போது திருத்தப்பட்டு புதிதாக அச்‌சிடப்பட்டு வழங்கப்படும்‌. அதுவரை விசேட அறிவுறுத்தல்‌ ஏதேனும்‌ வழங்கப்படலாம்‌ அல்லது அவசரமாக சரியாக அச்சிடப்பட்டு கொடுத்துவிட்டு பிழையான புத்தகங்களை மீளப்‌ பெறலாம்‌. இதுவிடயத்தில்‌, இந்த நடைமுறைகள்‌ பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.

ஆகவே, முஸ்லிம்கள்‌ மற்றும்‌ இஸ்லாமிய மார்க்கத்தை மிக நூதனமான உருச்சிதைத்து அல்லது தமக்கு விரும்பியதை மாணவர்‌களுக்கு புகட்டுவதற்கான திட்டமா என்ற கேள்வியும்‌ எழாமல்‌ இல்லை. முஸ்லிம்‌ களின்‌ கடந்தகால அனுபவங்கள்‌ அந்த எண்‌ணத்தை தோற்றுவிக்கின்றன.

ஒரே நாடு ஒரே சட்டம்‌ ஜனாதிபதி செயலணியின்‌ சிபாரிசுக்கு அமையவே இந்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சமூக வலைத்தளங்களில்‌ கருத்துக்கள்‌ வெளியி டப்பட்டுள்ளன. ஞானசார தேரரின்‌ கடந்த கால, அண்மைக்கால செயற்பாடுகள்‌, சந்‌திப்புக்கள்‌ இந்த சந்தேகத்தை வலுப்படுத்த போதுமானவையாக இருந்தன.

ஆனால்‌, “இவ்விடயம்‌ மேற்படி செயலணியில்‌ கலந்துரையாடப்பட்ட விடயம்‌ என்‌றாலும்‌, பாடசாலைப்‌ புத்தகங்களை மீளப்‌ பெறும்‌ அறிவுறுத்தலை செயலணி வழங்‌கவில்லை” என்று கூறியுள்ள அதன்‌ உறுப்‌பினர்‌ ஒருவர்‌, இதுவிடயத்தில்‌ செயலணி மீது விரல்‌ நீட்டப்படுவதையும்‌ முற்றாக நிராகரித்திருக்கின்றார்‌ என்பது குறிப்பிடத்‌ தக்கது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

கல்வி வெளியீட்டுத்‌ திணைக்களத்தினால்‌ நியமிக்கப்பட்ட குழுவின்‌ சிபாரிசுக்கு அமையவே இப்பணிப்புரை விடுக்கப்பட்‌ டதாக கூறப்படுகின்றது. ஆனால்‌ அந்தக்‌ குழுவின்‌ அறிக்கையோ, சிபாரிசுகள்‌ பொது வெளியில்‌ சமர்ப்பிக்கப்படவில்லை. ஜம்‌மியத்துல்‌ உலமா சபையோ சம்பளப்‌ பிரச்‌சினைக்காக போராடிய ஆசிரிய சமூகமோ அல்லது மார்க்க அறிஞர்களோ இன்னும்‌ தூக்‌கத்தில்‌ இருந்து விழித்து இதுபற்றி ஆராயத்‌ தொடங்கியதாக தெரியவும்‌ இல்லை.

சரி, அது ஒருபுறம்‌ இருக்கட்டும்‌! அண்மைய ஆண்டுகளில்‌ மேற்படி வகுப்புக்‌களில்‌ கல்வி கற்ற மாணவர்களுக்கு வழங்‌கப்பட்ட நூல்களில்‌ இந்தத்‌ தவறுகள்‌ உள்ளடங்கி இருந்தன என்றால்‌, அதிலிருந்து ஆயிரத்தெட்டுக்‌ கேள்விகள்‌ நீட்சி கொள்கின்றன.

அந்த நூல்களைக்‌ கற்ற மாணவர்கள்‌ பிழையான மார்க்க விடயத்தைக்‌ கற்றிருக்‌கின்றார்களா? அவர்கள்‌ பிழையாக வழிநடத்‌ தப்பட்டிருக்கின்றார்களா? அப்படியாயின்‌, அதனை தொகுத்த வளவாளர்கள்‌ யார்‌? அதற்கு மேலொப்பம்‌ இட்டு ஒப்புதல்‌ வழங்‌ கிய அதிகாரிகள்‌ யார்‌? பிழையான விடயம்‌ மாணவர்களுக்கு போதிக்கப்பட்டதற்கும்‌ சரியான விடயம்‌ கற்பிக்கப்படாததற்கும்‌ யார்‌ பொறுப்பு?

இவ்வளவு காலமும்‌ கொடுக்கப்பட்ட மேற்படி பாடப்‌ புத்தகங்களில்‌ தவறுகள்‌ இருந்திருந்தால்‌, கல்வியமைச்சில்‌ உள்ள அதிகாரிகளோ, ஜம்மியத்துல்‌ உலமா சபை போன்ற பொறுப்புவாய்ந்த முஸ்லிம்‌ அமைப்‌ புக்களோ, முஸ்லிம்‌ சமய அறிஞர்களோ, ஆசிரிய ஆலோசர்களோ, மெளலவிமார்‌களோ, இஸ்லாத்தை போதிப்பதற்காக சம்‌பளம்‌ வாங்குகின்ற ஆசியர்களோ, இதுகால வரை ஏன்‌ அந்தத்‌ தவறுகளை அடையாளம்‌ காணவில்லை?

அல்லது, இவ்வளவு காலமும்‌ அச்சிடப்‌பட்டு வழங்கப்பட்ட நாலில்‌ தவறுகள்‌ இல்லை என்று அவர்கள்‌ உறுதியாகச்‌ சொல்வார்கள்‌ என்றால்‌, ஏன்‌ இப்போது மீளப்‌ பெறும்‌ நடவடிக்கைக்கு எதிராக அவர்கள்‌ முதற்கொண்டு முஸ்லிம்‌ அரசியல்வாதிகள்‌ வரை பொறுப்புள்ள தரப்பினர்கள்‌ எவரும்‌ வாயைத்‌ திறக்காமல்‌ இருக்கின்றார்கள்‌? என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டி யுள்ளது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

பாடப்‌ புத்தகங்களை முஸ்லிம்கள்‌ சார்ந்த எந்த அமைப்பும்‌ நேரடியாக அச்சிடுவதில்லை. கல்வி அமைச்சிலும்‌ கல்வி வெளியீட்டுத்‌ திணைக்களத்திலும்‌ அதற்கென்று ஒரு நடைமுறை இருக்கின்றது, பரிந்துரைக்‌கப்பட்ட துறைசார்‌ வளவாளர்கள்‌ உள்ளனர்‌. இவர்கள்‌ எல்லோராலும்‌ சரி பார்க்கப்பட்டு அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்ட பதிப்‌புக்களிலான ஒருதொகுதி புத்தகங்களிலே, இப்போது தவறுகள்‌ அடையாளம்‌ காணப்பட்‌ டுள்ளன.

பாடப்‌ புத்தகங்கள்‌ என்பது வெறுமனே மாணவர்கள்‌ படித்துவிட்டு, பரீட்சையின்‌ வினாக்களுக்கு விடையளிப்பதோடு மட்டும்‌ சம்பந்தப்பட்ட விடயமல்ல. முழுக்‌ கல்வி யுமே மாணவர்களின்‌ வாழ்க்கையோடு ஏதோ ஒருவகையில்‌ கலந்து விடுகின்றது.

இதற்கு முன்னர்‌ வழங்கப்பட்ட மேற்படி இஸ்லாம்‌ பாடப்‌ புத்தகங்கள்‌ தவறுகளைக்‌ கொண்டிருந்தவை என்றால்‌, திருத்தத்துடனான புதிய புத்தகங்களை அச்சிடுவது அவசியமில்லை. புதிய திருத்தங்கள்‌ அவசியமென்றால்‌, இதுவரை காலமும்‌ ‘“நூறுவீதம்‌ சரியில்லாத’ விடயதானங்கள்‌ போதிக்கப்பட்டுள்ளன என்றுதான்‌ அர்த்தமாகும்‌.

ஆகவே, நிச்சயமாக இவ்விரண்டு பதிப்புக்களில்‌ ஏதாவது ஒன்று தவறாக அமையும்‌. அதனடிப்படையில்‌, அதற்கு காரணமாக அமைந்த துறைசார்ந்தவர்களும்‌, கல்வி அமைச்சின்‌ அதிகாரிகளும்‌ இதற்கான உள்ளக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்‌.

அல்லது, உத்தேச திருத்தங்கள்‌ கட்டாயமானவை அல்ல என்றும்‌, வேறு ஏதேனும்‌ ஒரு உள்நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ இது சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகின்றது என்றும்‌ கண்டறிந்தால்‌, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முஸ்லிம்‌ சமூகமும்‌ அரசாங்கமும்‌ முன்னிற்க வேண்டும்‌. அதைவிடுத்து, அதுவும்‌ சரிதான்‌, இதுவும்‌ சரிதான்‌ என்று கூறி விட்டு, வழக்கம்போல வாழாவிருக்கக்‌ கூடாது.

ஏ.எல் நிப்றாஸ் (30/1/2022) வீரகேசரி