கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்கு உத்தவை மீறி பயணித்த 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleகுழந்தைகளை தாக்கும் கவாசாகி நோய்! – பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleகவசாக்கி நோய் தொற்று குறித்து எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை