இலங்கையின் மூவின மக்களின் குடியேற்ற வரலாறும், இலங்கையின் சுதந்திரமும்

மண்ணின் வரலாற்றின் ஆரம்பம் முதல் இலங்கையின் புவி அமை விடத்தில் இலங்கை ஒரு காட்டுத் தீவாக அமைந்திருந்த போதிலும், இலங்கையின் வரலாற்றை ஆரயும் போது சுமார் 2000 ஆண்டுகளை பறைசாற்றும் அளவில் இலங்கை சம்பந்தமான வரலாறுகளே கிடைக்கப் பெறுகின்றன.

இலங்கையின் வரலாற்றை கூறுவதில் இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவமசம் முக்கியத்துவம் பெறுகின்றது. மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ஆம் நூற்றாண்டு அளவில் ஆக்கால சதிப் புரட்சியினால் இந்திய நாட்டிலிருந்து விரட்டப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன், தனது தோழர்கள் மற்றும் தனது அமைச்சர்கள் உட்பட சுமார் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் இலங்கையின் வரலாறுக் குறிப்புக்கள் ஆரம்பமாகின்றது.

எனினும் விஜயன் இலங்கையை வந்தடையும் போது, இயக்கர், நாகர் என குறிப்பிடப்படும் இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இலங்கையில் அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.

இயக்கர், நாகர் எனும் இனத்தவர்கள் பற்றி ஆராயும்போது, இவர்கள் இந்தியாவின் பழங்குடி மக்களை சேர்ந்தவர்கள் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்திய மக்களின் குடியேற்ற வரலாற்றுப் பதிவுகளில், ஆரியர் இந்தியவில் குடியேறும் போது அங்கு இயக்கர், நாகர் என அழைக்கப்படும் இனம் வாழ்ந்ததாக பதிவுகள் உள்ளன.

வரலாற்று சான்றுகளின்படி இவர்கள் தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்தவர்களாகவே குறிப்பிடப்படுகின்றது. இவ் வினத்தைச் சேர்ந்தவர்கள் தற்போதும் இந்தியாவில் சில பகுதிகளில் வசிப்பதாகவும் நவீன கால வரலாற்று நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் விஜயன் நுழையும் போது இலங்கை இயக்கர், நாகர் போன்ற இனத்தவர்களால் சி‌றிது சிறிதாக பல பகுதிகள் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களிடையே விஜயன் இலங்கைக்குல் கிபி 6ஆம் ஆண்டு நுழையும் போது அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் கிமு3 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசோகரின் புதல்வரான மகிந்த தேரர் இலங்கைக்கு வந்ததாகவும், அசோகரின் புதல்வி பிக்குனி சங்கமித்தை பௌத்த துறவியாகி இலங்கைக்கு போதி மரத்தைக் கொண்டு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.

மகிந்த தேரரால் கிமு 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இதைத் தொடர்ந்து அனுராதபுரம், பொலன்னறுவை அரசு கிபி 1070 முதல் கிபி 1200 வரை), வளர்ச்சியடைந்தன. அநுராதபுர, பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின.

இதனைத் தொடர்ந்து கிபி 1000 வருடங்களில் இருந்து இலங்கையில் முஸ்லிம்கள் இருந்த வரலாறுகள் ஆரம்பிக்கின்றன.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

இலங்கைக்கு வியாபார நோக்கத்திற்காக வந்த அரேபியர்களை அக்கால மன்னர்கள் கொரவித்த வரலாறுகள், கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கைக்கு பேர்துக்கேயர் வந்தபோது அவர்கள் யார் என்பதை உலகை அறியாத சிங்கள மன்னர்களுக்கு அவர்கள் யார் என்பதை அரேபியர்கள் விளக்கிய வரலாறுகள்,
இலங்கையில் இருந்த முஸ்லிம்கள் போர்துக்கேயரை இங்கே அனுமதிக்க வேண்டாம். அவர்கள் உங்கள் நாட்டை அபகரிக்க வருகிரார்கள் என்றும், அவர்களை விரட்டுங்கள் என்றும், அக்கால மன்னனுக்கு அலேசனை வழங்கிய வரலாறும் காணப்படுகின்றது.

இரண்டாம் ராஜசிங்க மன்னனை கொலை செய்ய போர்துகேயர் விரட்டி வந்த போது பம்பரத்தன்ன எனும் கிராமத்தில் முஸ்லிம் பெண் மன்னனை காப்பாற்றிய வரலாறும், பேர்துக்கேயரினால் அந்தப் பெண் கொல்லப்பட்டதும், அந்த இரத்தத்தைப் பார்த்த மன்னன் ( மா ரக்க ளே) என்ன காப்பாற்றிய இரத்தம் எனக்கூறிய வரலாறு இன்றும் காணப்படுகின்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒட்டகம் சாப்பிடகூடிய (போவாப்) என அழைக்கப்படும் மரங்கள் சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தவை எனவும், அவை அக்காலத்தில் இலங்கை நோக்கி வந்த அரேபியர்களால் அவர்களின் ஒட்டகத்தின் உணவுக்காக நடப்பட்டவை என கண்டரியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் வரலாற்றை பொறுத்த வரையில் அநுராதபுரம் பெலன்றுவை காலப் பகுதியில் இலங்கையின் தமிழ் வரலாறுகள், வடபகுதி சம்பந்தமாக தெளிவான வரலாறுகள் காணப்படாத போதிலும், 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆன காலப்பகுதியில் இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றியும் அங்கு ஆட்சி செய்த ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

அக்கால தலை நகரங்களான அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன.

இலங்கையின் போர்த்துக்கேய காலப்பகுதியாக 1505 – 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். இந்த உடன்படிக்கையே இறுதியில் இலங்கை மன்னர்களுக்கு வினையாக அமைந்தது. இந்த இடத்தில் அக்கால முஸ்லிம் மக்களின் ஆலோசனையை புறக்கணித்தமையே இலங்கை போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

Read:  வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதி

அதாதோடு போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டது. இதன் பிற்பாடு போர்த்துக்கேயரினால் இலங்கையில் கிறிஸ்தவ மத அறிமுகம் ஆரம்பமாகியது.

இவ் அவறிமுகமானது அக்காலத்தில் கிமு 3ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த தேரரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெளத்த மக்களின் எதிர்ப்பின் மத்தியில் படிப்படியாக வளரத் தொடங்கியது.

16 வது நூற்றாண்டு காலம் ஆகும் போது நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின. இன்று கைரையோர பகுதிகளில் அதிகாமான கிறிஸ்துவ மக்கள் செறிந்து வாழ்வதற்கும் அதிகமான கிறித்துவ தேவாலயங்கள் அமையப் பெறுவதற்கும் இவை வரலாறு சான்றுகளாக காணப்படுகின்றது.

1796 – 1948 வரை இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடிக்குறிய நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானியாவின் கிழக்கிந்திய வர்த்தக நிறுவனங்களே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ்க் வைத்திருந்தன .

இதனைத் தொடர்ந்து 1796 ஆம் ஆண்டு முதல் இலங்கையை பிரித்தானிய ஆட்சி நிலவி வந்தாலும் 1815 ஆம் ஆண்டிற்கு பிறகு முழுமையான முழு நாடும் தனி பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது.

பிரிதானியா ஆட்சியின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வந்த இலங்கை, தொடர்ந்து ஆட்சி செய்து வந்த வெள்ளையார்களின் கொடுமையான வரி நிபந்தனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இறுதியாக நாய் வரி, தென்னை மரங்களுக்கான வரியும் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இதனைத் தொடர்ந்து ஆரம்பமானது. இதன் வரிசையில் 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக புரட்சி, 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை போராட்டம், 1826ஆம் ஆண்டு பிம்தென்னை கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் அலை அலையாக தொடர்ந்தன.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

நாட்டு மக்கள் அந்நியரிடம் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இவ்வாறான அந்நிய ஆதிக்கதாதிற்கு எதிரான புரட்சிகள் தொடர்ந்தும் நடத்தி வந்தார்கள் .

இதன்படி 1818 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஊவா வெல்லஸ்ஸ மாபெரும் மக்கள் கிளர்ச்சியினால் ஆங்கலேய நிர்வாகம் ஆடிப்போனது . இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர் சிறிய அளவில் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் சற்று கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ் ஊவா வெல்லஸ்ஸ போராட்டம் இலங்கை வெள்ளையருக்கு எ‌திரான சுதந்திரத்தில் மிகவும் பெரிய அளவிலான திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மக்களை சமாளிக்கும் விதத்தில் 1831ஆம் ஆண்டில் ஆங்கில அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறுக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர்.

இருந்தாலும் பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை. மக்களுக்கு இவை வெள்ளையடிக்கபட்ட கல்லறையாக காணப்பட்டது.

இதில் முக்கிய சிறப்பம்சமாக இலங்கை மக்கள் இன மத வேறுபாடின்றி, மூவின மக்களும் சுதந்திரத்திற்காக போராடி னார்கள் . இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனமும் தாங்களின் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் தம் சமூக, தத்தம் இன தலைவர்களின் கீழ் ஓற்றுமையாக நின்று போராடியதில் வெள்ளை ஆட்சியாளர்களுக்கு மக்களின் போராட்டத்தை நின்று பிடிக்க முடியவில்லை.

இவற்றில் இன்று சில திட்டமிடப்பட்ட சதிகளால் இலங்கையின் சகல இன மக்களாளும் நடத்தப்பட்ட பேராட்டம் மூடி மறைக்க முற்பட்டாலும் இவை அத்தனையும் வரலாற்றுச் சான்றுகளாகும்.

இதனைத் தொடர்ந்து 1848 ஆம் ஆண்டு மாத்தளை கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அதுவே சுதந்திர இலங்கையின் முழுமையான சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது.

1796 ஆம் ஆண்டு முதல் பகுதி பகுதியாக பிரிதானியாவிடம் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பிரிதானியா ஏகாதிபத்திய அடிமைப்படுத்தப்பட்டு இருந்த ஆட்சி 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, பிரித்தானியாவின் அடிமைத்தனமான காலனித்துவ ஆட்சி முடிவிற்கு வந்தது. (பேருவளை ஹில்மி )