வீதியில் கண்டெடுத்த 12 பவுண் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு

வீட்டில் நகை­களை வைத்து விட்டு போனால் திருட்டுப் போய்­விடும் என்ற அச்­சத்தில், தான் பதி­னாறு வரு­டங்­க­ளாக சிறுகச் சிறுக சேர்த்து வந்த 12 பவுண் தங்க நகை­களை தன்­னுடன் எடுத்துச் சென்ற போது தொலைத்­துள்ளார் வாழைச்­சேனை கோழிக்­கடை வீதியில் வசித்து வரும் பெண்­ணொ­ருவர் தனது மக­ளுக்கு கொவிட் 19 தடுப்­பூசி செலுத்திக் கொள்­வ­தற்­காக அந்த பெண்­மணி கடந்த 19 ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் அவ­ரது வீட்­டி­லி­ருந்து தடுப்­பூசி செலுத்தும் நிலையம் நோக்கிச் செல்லும் போதே தான் எடுத்துச் சென்ற நகை­களை தொலைத்­துள்ளார்.

தவ­ற­விட்ட நகை­களை அந்த பெண்ணும் அவ­ரது குடும்­பமும் பல இடங்­களில் தேடியும் கிடைக்­க­வில்லை. இந் நிலை­யில்தான் இவ்­வாறு தொலைந்து போன 12 பவுண் நகை­களும் மூன்று நாட்­களின் பின்னர் கடந்த 21 ஆம் திகதி அந்த பெண்ணின் கைக­ளுக்கே கிடைக்கப் பெற்­றுள்­ளன.

வாழைச்­சேனை அந்நூர் தேசிய பாட­சா­லையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் ரபீக் முகம்மட் சப்றான் எனும் மாணவன் பாட­சாலை விட்டு வீடு செல்லும் போது வீதி­யோரம் சிவப்பு நிற பை ஒன்றை கண்­டெ­டுத்­துள்ளார்.

சப்றான் அந்த பையை திறந்­த­போது அதில் ஏரா­ள­மான தங்க நகைகள் இருப்­பதைக் கண்டு வியந்து போயுள்ளான். உட­ன­டி­யாக அதனை வீட்­டுக்கு கொண்டு சென்று பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

நகைகள் தொலைந்து போன தக­வலை அறிந்து கொண்ட சப்­றானின் பெற்­றோர்கள் உட­ன­டி­யாக உரி­மை­யா­ளர்­களைத் தேடிச் சென்று 21ஆம் திகதி நகைகளை ஒப்­ப­டைத்­தனர்.

நகை­களை தொலைத்த கவ­லையில் இருந்த பெண்­ணுக்கு மீண்டும் நகைகள் கிடைத்­தது பெரும் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

Read:  மீண்டும் ரணில் !!

வீடு­களில் புகுந்து நகை­களை கொள்­ளை­ய­டிக்­கு­ம­ளவு பஞ்சம் நில­வு­கின்ற இந்த காலத்தில் இவ்­வாறு நகை­களை கண்­டெ­டுத்து வழங்­கி­யமை அனை­வ­ராலும் வெகு­வாக பாராட்­டப்­பட்­டது.

தனது நகைகள் அவ்­வாறே மீளக் கிடைத்­ததால் மகிழ்ச்­சி­யுற்ற அதன் உரி­மை­யாளர், சப்­றானின் தாய்க்கு தங்க மோதிரம் ஒன்றை அன்­ப­ளிப்புச் செய்த போதும் அதனை சப்­றானின் தாய் ஏற்க மறுத்­து­விட்டார்.

“இப்­போது களவு, கொள்ளைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. அத­னால்தான் நான் வெளியில் செல்லும் போது நகை­களை எடுத்துச் சென்றேன். நான் நகை­களை தவ­ற­விட்ட போது குறி­பார்ப்­ப­வர்­க­ளிடம் சென்று நகை­களை கண்­டு­பி­டிக்­கு­மாறு என்­னிடம் பலர் கூறி­னார்கள். நான் நகை­களை தொலைத்­தது போன்று எனது ஈமானை தொலைக்க விரும்­ப­வில்லை.

அந்த நகைகள் அனைத்­தையும் நான் பதி­னாறு வரு­டங்­க­ளாக சிறுகச் சிறுக சேமித்தே வாங்­கினேன். அதில் ஹராம் கலந்து விடக் கூடாது என்­ப­தற்­காக நான் கஷ்டமான நிலையில் இருந்த போதும் வட்­டிக்கு அடகு வைக்­க­வில்லை. அல்லாஹ் என்னை கை விட­மாட்டான் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்கை எனக்குள் இருந்­தது. அதே­போன்­றுதான் அல்லாஹ் எனது நம்­பிக்­கையை வீணாக்­க­வில்லை” என்று நகை­களின் உரி­மை­யாளர் மேலும் குறிப்­பிட்டார்.

இளை­ஞர்கள், சிறு­வர்கள் மத்­தியில் போதைப்­பொருள் பழக்­க­வ­ழக்­கங்கள், திருட்டுச் சம்­ப­வங்கள் நிறைந்து காணப்­ப­டு­கின்ற இந்த கால கட்­டத்தில் சப்­றானின் முன்­மா­தி­ரி­யான இந்த செயற்­பா­டா­னது அனை­வ­ரையும் பிர­மிக்க வைத்­துள்­ளது.
இந் நிலையில் நகை­களை கண்­டெ­டுத்து ஒப்­ப­டைத்த மாணவன் சப்­றானை கௌர­வித்து பாராட்­டிய நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை (24) வாழைச்­சேனை அந்நூர் தேசிய பாட­சா­லையில் நடை­பெற்­றது.

பாட­சாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் நகை உரி­மை­யா­ளரின் சார்­பாக அவ­ரது உற­வி­ன­ரான வாழைச்­சேனை அல் அக்ஸா விளை­யாட்டுக் கழக தலைவர் பிஸ்­தாமி ரவூப் கலந்து கொண்டு பணப் பரிசு மற்றும் நினைவுப் பரி­சில்­களை மாணவன் சப்­றா­னுக்கு வழங்கி வைத்தார்.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

மாணவன் சப்­றானை பாட­சாலை அதிபர், ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள், பிர­தேச மக்கள் எனப்­ப­லரும் பாராட்டி வாழ்த்­தி­ய­துடன் அவ­ரது முன்­மா­தி­ரி­யான செயலை ஏனைய மாண­வர்­களும் பின்­பற்ற வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினர்.

விடிவெள்ளி பத்திரிகை 2022-01-31

(எச்.எம்.எம்.பர்ஸான்)