டைல்ஸ், குளியலறை உபகரணங்கள்‌ மீதான தடை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்‌ -‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ தெரிவிப்பு

டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்களின்‌ இறக்குமதிகள்‌ மீதான தற்காலிக தடையானது ஆதன சந்தை வணிகம்‌, களஞ்சியசாலை,. வங்கி மற்றும்‌ நிதி, கட்டுமானம்‌ உள்ளிட்ட பல்வேறு துணை தொழிற்துறைகளிலும்‌ பாரிய எதிர்‌ மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்‌ என டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது .

டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ இலங்கையில்‌ 300 க்கும்‌ அதிகமான இறக்குமதியாளர்களைக்‌ கொண்டுள்ளதுடன்‌, அவர்களில்‌ பெரும்பாலோனார்‌ நாட்டின்‌ பொருளாதாரத்துக்கு வரி வருமானம்‌ மூலம்‌ பங்களிப்பு செய்யும்‌ 30 ஆண்‌டுகால நீண்ட வரலாற்றைக்‌ கொண்‌டுள்ளதுடன்‌ வருடாந்தம்‌ மொத்தமாக ரூபா 12 பில்லியன்‌ வரியாக செலுத்தப்படுவதாகவும்‌ அச்சங்கம்‌ சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில்‌ கருத்து தெரிவித்த டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌, காமில்‌ ஹூசைன்‌, “சந்தை தேவையை பூர்த்தி செய்ய போதுமான உள்நாட்டு உற்பத்தி இல்லை, இது விலைகளை உயர்த்தியது மட்டுமல்லாமல்‌, திட்டத்தினை உரிய நேரத்தில்‌ நிறைவுசெய்வதில்‌ கட்டுமானத்‌ துறையிலும்‌ உள்நாட்டு நுகர்வோரிடமும்‌ மோசமான தாக்‌கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதியாளர்கள்‌ 100% வரி பங்களிப்பை ‘வழங்கும்‌ போது, உள்நாட்டு உற்பத்‌தியாளர்களுக்கு அரசாங்க விலை மனுக்கோரலில்‌ முன்னுரிமை அளிக்‌கப்படுவதால்‌, சந்தையில்‌ 50% க்கு மட்டுமே நாங்கள்‌ சேவை செய்‌கிறோம்‌.

இந்த ஒரு பக்கச்சார்பான முறையானது நியாயமற்ற விதத்தில்‌ நன்மையடைய அவர்களுக்கு அனுமதியளிக்கின்றமை குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்‌. அந்நிய செலாவணி வெளிப்பாச்சலைக்‌ குறைப்பதற்கான அரசாங்கத்தின்‌ தேவையை நாங்கள்‌ புரிந்துகொள்‌கிறோம்‌, ஆனால்‌ எங்கள்‌ தரவுகள்‌ மூலம்‌ நாம்‌ சுட்டிக்காட்டுவது என்‌னவெனில்‌, பரந்தளவில்‌ நோக்கும்‌போது, இறக்குமதி மீதான தற்காலிக தடையால்‌ நாட்டிற்கு எந்த நன்‌மையும்‌ இல்லை, அதே நேரத்தில்‌ ஏற்படும்‌ பாதிப்பை நாட்டின்‌ அனைத்து மூலைகளிலும்‌ ஆயிரக்கணக்கான இலங்கையர்களால்‌ உணரமுடியும்‌,”என்றார்‌.

தற்போது, இந்த தொழிற்துறையானது நாடு முழுவதும்‌ சுமார்‌ 50,000 தனிநபர்களுக்கு நேரடி மற்றும்‌ மறைமுக தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. 3500 வரையான உறுப்பினர்களை நாடு முழுவதும்‌ கொண்டுள்ள இவ்வமைப்பு 2,000 க்கும்‌ மேற்பட்ட விற்பனையாளர்‌களை நியமித்துள்ளதுடன்‌, அவர்கள்‌ தொழில்‌ முயற்சியாளர்களை உருவாக்கவும்‌, பல்வேறு சிறு மற்றும் பெருநகரங்களில்‌ நுண்‌ கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்யவும்‌ உதவியுள்ளனர்‌.

கட்டிடக்‌ கலைஞர்கள்‌, பொறியியலாளர்கள்‌, ஆலோசகர்கள்‌, அளவு கணக்கெடுப்பாளர்கள்‌, துணை ஒப்பந்தக்காரர்கள்‌ மற்றும்‌ டைல்ஸ் மேசன்கள்‌ மற்றும்‌ நாளாந்த வருமானம்‌ பெறுபவர்கள்‌ போன்ற தொழில்களை முன்னெடுப்பவர்‌களின்‌ வேலைவாய்ப்பினை இது போன்ற நடவடிக்கைகள்‌ குறைக்கும்‌ வாய்ப்புக்கள்‌ உள்ளன.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter