இயல்பு நிலைக்கு திரும்பிய ஜப்பான்

ஜப்பானில் 8மாகாணங்களை விட ஏனைய பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஆசிய நாடான ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 47மாகாணங்களில் டோக்கியோ, ஒசாகா உட்பட எட்டு மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.

சுறு சுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பியுள்ளனர். திட்டமிட்டதை விட இரண்டு வாரங்களுக்கு முன் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஜப்பானில் 16ஆயிரத்து 367பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 768பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 11 ஆயித்து 564 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters