மகன் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் பரபரப்பில் 3 வயது குழந்தையை கைவிட்ட பெற்றோர்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தமது பிள்ளையை அழைத்துச் சென்ற பெற்றோர் தமது அடுத்த பிள்ளையை மறந்து கைவிட்டு சென்ற சம்பவம் ஒன்று கண்டி கெலிஓயாவில் இடம் பெற் றுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தமது பிள்ளையை அழைத்துச் சென்ற பெற்றோர் தம்முடன் அழைத்துச் சென்ற தமது 3 வயது மதிக்கத்தக்க மகளை பாதையில் ஓரத்தில் கைவிட்டுச் சென்றதால் சிறுவன் திக்கு முக்காடிய பின்னர் பெரும்பான்மை சமூகப் பெண் ஒருவர் அக்குழந்தையை பாதுகாத்து வைத்திருந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இடம் பெற்றது. கண்டி மாவட்டத்தில் கெலிஓயாவைச் சூழ உள்ள தமிழ் மொழி மூலமாணவர்க ளுக்கு கெலிஓயா தவுகல வீதியில் அமைந்துள்ள ஒரு சிங்கள மகாவித்தியாலத்தில் மேற்படி பரீட்சை மண்டபம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்படி மண்டபத்திற்கு கலுகமுவ பகுதியில் இருந்து ஒரு பரீட்சார்த்தியின் பெற்றோர் தமது பிள்ளையை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் தம்முடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க தமது மற்றொரு குழந்தையையும் அழைத்து வந்துள்ளனர். மேற்படி பரீட்சை மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீதியில் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் சற்று வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது பாதுகாப்பாக பாதையைக் கடந்து தமது பிள்ளையை பரீட்சை மண்டபத்தில் பத்திரமாக சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதையை கடந்துள்ளனர்.

ஆர்வ மேலீட்டால் தமது மற்ற குழந்தை பற்றி எதுவித் நினைவும் இல்லாதவர்களாக பாதையை கடந்துள்ளனர்.

அக்குழந்தை பாதை மாறத் தெரியாத நிலையில் தனித்து விடப்பட்டதால் அச்சமடைந்து கூக்குரலிட்டு அழ ஆரம் பித்து விட்டது. சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதால் மொழியும் புரியாத நிலையில் ஒரு சிங்களப் பெண்மணி குழந்தையை உடன் வைத்து பாதுகாத்துக் கொண்டிருந்துள்ளார். குழந்தை தொடர்ந்து அழ ஆரம்பித்தது. குழந்தையின் பெற்றோர் யார் என்பது கூடத் தெரியாத நிலையில் குழந்தை அப் பெண்ணிடம் இருந்தது. தமது குழந்தை கணவனிடம் இருப்பதாக மனைவியும் மனைவியிடம் இருப்பதாக கணவனும் நினைத்துள்ளனர். குழந்தை அநாதரவாக பாதை ஓரத்தில் அழுகையுடன் இருந்துள்ளது. தாய் பரீட்சை மண்டபத்தினுள்ளும் தந்தை அதற்கு வெளியேயும் நின்றுள்ளனர்.

Read:  மீண்டும் ரணில் !!

பரீட்சை ஆரம்பித்த போது மண்டபத்தை விட்டு தாய் வெளியே வந்துள்ளார். அப்போதுதான் குழந்தை ஒன்று அநாதரவாக கைவிடப்பட்ட செய்தி பரவ ஆரம்பித்து தாயின் காதுக்கும் எட்டியுள்ளது. அதன் பின்னரே தமது குழந்தை தம்முடன் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியவந்துள்ளது. ஒருவரை ஒருவர் குற்றம் காட்டியவர்களாக குழந்தையை தேடிய போது அழுகுர லுடன் காணப்பட்ட குழந்தையை ஒரு சிங்களப் பெண்மணி உரியவர்களிடம் ஒப்படைத்தார். அது மட்டுமல்ல அந்தப் பெண்ணால் என்னென்ன வார்த்தைகளைப் பாவிக்க முடியுமே அனைத்து வார்த்தைகளையும் பாவித்து கடுமையாக பெற்றோரை திட்டித்தீர்த்தார். (தினக்குரல் யாழ் -24/1/2022)