ஈதுல்பித்ர் எளிமையாக கொண்டாடுவோம் – இலங்கை இமாம்கள் மன்றத்தின் வழிகாட்டல்

முஸ்லிம் சமூகத்தின் இருபெரும் பெருநாள்களில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளும் ஒன்றாகும்.
கொவிட்-19 தாக்கமானது சர்வதேசத்தை மட்டுமலல்லாது எமது இலங்கை நாட்டையும்  ஆட்டம் காண வைத்திருக்கும் இதே வேளை மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளுமாறு இலங்கை இமாம்கள் மன்றம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 அல்லது 25ம் திகதியில் கொண்டாடப்படவுள்ள ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் மஸ்ஜித் இமாம்களுக்கும் முக்கியமான சில வழிகாட்டல்களை தர விரும்புகின்றோம்.

1. சமூக ஒற்றுமையை கருத்திற்கொண்டு கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஒன்றுகூடி அறிவிக்கும் ஷவ்வால் முதல் தினத்தை பெருநாள் தினமாக ஏற்றுக் கொள்ளுதல்.

2. ஈதுல் பித்ர் பெருநாளை சமூக இடைவெளி பேணி எளிமையாகவும் அமைதியாகவும் கொண்டாடுமாறு ஊர் ஜமாஅத்தினர்களை வலியுறுத்தல்.

 3. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மஸ்ஜிதுகளிலும் பொது இடங்களிலும் கூட்டாக பெருநாள் தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.

4. பல வீட்டுடையவர்கள் கூட்டாக சேர்ந்து பெருநாள் தொழுகையில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.

5.ஊர் ஜமாஅத்தினரில் ஒரு சிலர் மஸ்ஜித் இமாம்களை முன்னிறுத்தி பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதை அனுமதிக்காதிருத்தல்.

6. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் மறு அறிவித்தல் வரை பெருநாளைத் தொடர்ந்து வரும் நாட்களில் மஸ்ஜிதுகளில் கூட்டு அமல்கள் நடத்துவதை தவிர்த்தல்.

7. பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் அனைத்து கலை, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.

8. தமது மஸ்ஜிதுகளில் பணிபுரியும் இமாம்களுக்கு வழங்க வேண்டிய மாதாந்த ஊதியங்களையும் ரமழான் விஷேட அன்பளிப்புகளையும் கௌரவமாக வழங்க ஏற்பாடு செய்தல்.

9.வெளியூரைச் சேர்ந்த மஸ்ஜித் இமாமக்ளை அவர்களது ஊரக் ளுக்கு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தல்.

10. ஊடரங்கு விடுமுறையில் இதுவரை தமது வீடுகளிலேயே தங்கியிருக்கும் மஸ்ஜித் இமாம்களையும் கவனித்தல்.

குறிப்பு – இவைகளை நடைமுறைப்படுத்துவதில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர் அஷ்-ஷேக் பௌசுல் அமீர் (முஅய்யிதி) செயலாளர் அஷ்-ஷேக் மபாஸ் (ஹாமிதி)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page